தெலங்கானாவில் ரூ.8,000 கோடி முதலீடு: 20 நிறுவனங்கள் ஆர்வம்

By பிடிஐ

புதிதாக உருவான தெலங்கானா மாநிலம் ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது.

இம்மாநில அரசு உருவாக்கிய புதிய தொழில் கொள்கைதான் இதற்குக் காரணம் என்று கூறப் படுகிறது. தொழில் தொடங்க 20 நிறுவனங்களிடமிருந்து விண் ணப்பங்கள் வந்துள்ளதாக அம்மாநில தொழில்துறை அமைச்சர் ஜுபளி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் தொழில் கொள்கை உருவாக்கப்பட்டது. தொழில் தொடங்க முன் வரும் நிறுவனங்களுக்கு உரியகாலக் கெடுவுடன் அனுமதி, லஞ்சம் கிடையாது உள்ளிட்டவற்றோடு 6 தொழில் பேட்டைகள் உருவாக் கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இப்போது தொழில் தொடங்க முன்வந்துள்ள நிறுவனங்களின் குறைந்தபட்ச முதலீடு ரூ. 200 கோடியாகும். இவற்றுக்கு 15 நாள்களில் லைசென்ஸ் வழங் கப்படும் என்று தெரிவித்தார்.

குறிப்பிட்ட காலத்துக்குள் லைசென்ஸ் வழங்க வேண்டும் என்பதை அந்தந்த துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் விமான பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஹைதராபாதில் தொழில் தொடங்க ஆர்வம் தெரிவித் துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மற்ற மாநிலங்களை விட தெலங்கானா மாநில அரசு வசம் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாகவும் இதை தொழிற்சாலைகளுக்கு ஒதுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்