பொதுத்துறை வங்கிகளில் அதிக சீர்திருத்தம் செய்ய அரசு முடிவு: அருண் ஜேட்லி தகவல்

By ஐஏஎன்எஸ்

வங்கித் துறையில் அதிக சீர்திருத் தங்கள் செய்ய வேண்டியிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

புனேயில் நடைபெற்ற வங்கி யாளர்கள் மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜேட்லி, வங்கித் துறையில் அதிக திறமை படைத்தவர்களை சேர்க்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது என்று குறிப்பிட்டார். அத்துடன் பொதுத்துறை வங்கி களை சுதந்திரமான அமைப்பாகச் செயல்பட தேவையான சீர்திருத் தகங்களை செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வங்கித் துறையின் ஸ்திரத் தன்மையை சீர்குலைப்பதாக வாராக் கடன் மற்றும் திரும்பாக் கடன் ஆகியன உள்ளன. வர்த்தக ரீதியில் லாபகரமானதாக செயல் பட வைக்கக் கூடிய சிந்தனை யுள்ளவர்களை வங்கித்துறையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

வங்கிகளின் வாராக் கடன் அளவு (என்பிஏ) மிகவும் அதிகமாக உள்ளது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதுபோன்ற வாராக் கடனை வசூலிப்பதில் வர்த்தக சிந்தனையோடு சுதந்திரமாக செயல்பட வங்கிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பற்றாக்குறை

நாட்டின் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா குறிப்பிட்டார்.

நடப்பு நிதி ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் பற்றாக்குறையைக் கட்டுப் படுத்துவோம். பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவது வெறும் எண்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது எந்த அளவுக்கு சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்க்க வேண்டும். நியாயமான, ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் பற்றாக்குறை இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக செயல்பட்டுவருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

2014-15-ம் நிதி ஆண்டுக்கான பற்றாக்குறை அளவில் இதுவரை 98.9 சதவீதம் எட்டப்பட்டு விட்டதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கடந்த நவம்பரில் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தது. பற்றாக்குறை அளவு நவம்பரில் ரூ. 5.25 லட்சம் கோடியாக இருந்தது.

கடந்த நிதி ஆண்டு (2013-2014) இதே காலத்தில் பற்றாக்குறை 93.9 சதவீதமாக இருந்தது.

பற்றாக்குறையை குறைத்துக் காட்டுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் பணவீக்கத் தைக் கட்டுப்படுத்த இந்த அரசு எடுத்ததைப் போன்ற நடவடிக்கை களை இதற்கு முன் எவரும் எடுத்ததாக தனக்குத் தெரிய வில்லை என்று சின்ஹா சுட்டிக் காட்டினார்.

பற்றாக்குறையைக் கட்டுப்படுத் தும் இலக்கை நிச்சயம் எட்டுவோம் என்று அவர் கூறினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதம் முதல் 8 சதவீத அளவை எட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்