மேக்ஸ் இந்தியா நிறுவனம் மூன்றாக பிரிப்பு

By செய்திப்பிரிவு

மேக்ஸ் இந்தியா நிறுவனம் மூன்று பட்டியலிடப்பட்ட நிறுவனமாக பிரிப்பதற்கு இயக்குநர் குழுமம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆயுள் காப்பீடு நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதற்காக தனித்தனியாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் அவசர சட்டம் கொண்டு வந்த ஓரிரு மாதங்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் காப்பீட்டுக்கு மேக்ஸ் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனமும், மருத்துவம், மருத்துவக் காப்பீடு சார்ந்த வியா பாரத்துக்கு மேக்ஸ் இந்தியாவும், உற்பத்தித் துறைக்கு மேக்ஸ் வென்ச்சர்ஸ் மற்றும் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனமும் பிரிக்கப் பட்டிருக்கிறது.

ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீட்டா ளர்களான மிட்சூ மற்றும் பூபா ஆகிய நிறுவனங்கள் தங்களின் பங்குகளை உயர்த்திக்கொள்ள விரும்பினார்கள். அதற்கேற்ப இந்த நிறுவனங்கள் பிரிக்கப்பட்டதாக நிறுவனர் அனல்ஜித் சிங் தெரி வித்தார்.

இந்த நடவடிக்கைகள் இன்னும் ஆறு மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி இந்த நிறுவனத்தின் வசம் 605 கோடி ரூபாய் ரொக்கமாக இருக்கிறது.

நிறுவனம் பிரிக்கப்பட்டதால் 8 சதவீத அளவுக்கு இந்த பங்குகள் உயர்ந்தன. 492 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்