சேவை துறையில் அந்நிய நேரடி முதலீடு 20% உயர்வு

By செய்திப்பிரிவு

தொழில் புரிவதற்கான சூழலை எளிதாக்குவதற்காக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளால் அந்நிய நேரடி முதலீடுகள் உயர்ந்து வருகின்றன. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் சேவை பிரிவில் அந்நிய நேரடி முதலீடு 20 சதவீதம் உயர்ந்து 184 கோடி டாலராக இருக்கிறது.

கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 146 கோடி டாலர் அந்நிய முதலீடு இதே பிரிவில் வந்தது. சேவை பிரிவு என்பது வங்கி, காப்பீடு, ஆர் அண்ட் டி, கொரியர், அவுட்சோர்சிங் உள்ளிட்ட பிரிவுகளைக் கொண்டதாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அந்நிய நேரடி முதலீடு 22 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 1,545 கோடி டாலர் அளவுக்கு அந்நிய நேரடி முதலீடு இருந்தது, ஆனால், தற்போது 22% உயர்ந்து 1,888 கோடி டாலர் அளவுக்கு அந்நிய முதலீடு இருக்கிறது.

அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்காக காப்பீடு துறையில் 49 சதவீத அந்நிய முதலீட்டை மத்திய அரசு உயர்த்த நடவடிக்கை எடுத்தது. மருத்துவ சேவை, ரயில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு துறையிலும் இதேபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. அந்நிய முதலீடு உயரும் போது வர்த்தகப்பற்றாக்குறை குறைந்து ரூபாய் மதிப்பு பலமடையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்