இவரைத் தெரியுமா? -டேவிட் எம் கோட்

By செய்திப்பிரிவு

அமெரிக்கத் தொழிலதிபர். ஹனிவெல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இந்தியா வந்த வர்த்தகக் குழுவின் தலைவர்.

ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் 1979-ம் ஆண்டு சேர்ந்து 20 ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்நிறுவனத்தில் உற்பத்தி, நிதி, சந்தைப்படுத்துதல், உத்திகள் வகுப்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 1996-ம் ஆண்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியானார்.

1999-ம் ஆண்டு கிளீவ்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டிஆர்டபிள்யூ நிறுவனத்தில் சேர்ந்தார். ஆட்டோமோடிவ், விமானத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறையில் ஈடுபட்ட இந்நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். 2002-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்புக்கு உயர்ந்தார்.

2009-ம் ஆண்டில் ஹனிவெல் நிறுவனத்தில் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

மான்செஸ்டரில் பிறந்த இவர் பெம்புரோக் அகாதெமியில் இளங்கலைப் பட்டமும், ஹாம்ப்ஷயர் பல்கலையில் நிர்வாகவியல் பட்டமும் பெற்றவர்.

அமெரிக்க அரசின் செலவு கட்டுப்பாடு மற்றும் சீர்திருத்தக் குழுவின் தலைவராக இவரை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார். அமெரிக்க வர்த்தகக் குழுவின் செயல் குழு உறுப்பினராக 2011-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்