Title : The Habits of Success: Nurturing Intelligence in Every Aspect of Life
Author : Henry Toi
Publisher : Embassy Books Distributors; 1 edition
வெற்றிபெறுவதற்கு சிந்தனையும் செயலும் மிகமிக முக்கியமான ஒன்றாகும். வெற்றிபெறுவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து ஏராளமான புத்தகங்கள் இருக்கும் போது வெற்றிபெறுவதற்கான சிந்தனைகளை எப்படிச் செய்வது என்று சொல்லும் புத்தகம் இது. வெற்றிபெற்றவர்களுடைய மூளையின் சிந்தனைத்திறனில் இருந்த ஒருமைப்பாடுகளைச் சொல்லி அது போன்ற சிந்தனைத் திறன்களை வளர்த்துக்கொண்டால் எடுத்த எதிலும் வெற்றி பெறலாம் என்று சொல்கின்றது இந்தப் புத்தகம். இந்தப் பழக்கத்தை எப்படி பெறுவது மற்றும் தக்க வைத்துக்கொள்வது என்பது பற்றி படிப்பதற்கு சுவையாகச் சொல்கின்றது இந்தப் புத்தகம்.
Title : The Success Journey: The Process of Living Your Dreams
Author : John C Maxwell
Publisher : Thomas Nelson (February 5, 1997)
வெற்றி என்பது எது என்பதை வரையறை செய்வதே மிகவும் கடினமான காரியம். நம்மில் பலர் பணத்தை வெற்றி என்கின்றோம். சிலர் அதிகாரம் பொருந்தியிருப்பதை வெற்றி என்கின்றோம். வெகுசிலரோ மனமகிழ்ச்சியே வெற்றி என்கின்றோம். வெற்றி என்பது என்னுடைய கையில் இந்த தேதியில் இந்த நிமிடத்தில் கிடைத்தது என்று யாராலும் சொல்ல முடியாது. ஏன் தெரியுமா? வெற்றி என்பது நம் வாழ்க்கையில் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு வாழ வேண்டிய ஒன்றாகும். வெற்றி என்றால் என்னவென்று தெளிவு படுத்தும் புத்தகம் இது.
Title : Succeed On Your Own Terms: Lessons from
Top Achievers around the World on Developing Your Unique Potential
Author : Herb Greenberg, Patrick Sweeney
Publisher : Tata McGraw - Hill Education; 1 edition
மனிதனுக்கு வெற்றியைக் கொண்டுவருவது எது? அவர்களின் எனர்ஜியா? அதிர்ஷ்டமா? தொலைநோக்குப்பார்வையா? ஃபோகஸா? வெற்றிபெற்றவர்களிடம் இருக்கும் சிறப்பு குணாதிசயம் என்னென்ன என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளார்கள். மீண்டுவருதல், மற்றவரின் நிலையறிதல், தொடர் முயற்சி, போட்டிபோடுவதற்கான தகுதியுடனிருத்தல், தன்னம்பிக்கை போன்றவையே வெற்றிபெற்ற மனிதர்களின் சிறப்பான குணம் என்கின்றது இந்தப் புத்தகம்.
Title : The Success Code: 29 Principles for achieving
Abundance, Success, Charisma, & Personal Power in Your Life
Author : Dr. Joe Rubino
Publisher : Vision Works Publishing; 1st edition
தொழிலில், உறவுகளில், வாழ்வில் மகிழ்ச்சியாகவும், சக்திவாய்ந்தவர்களாகவும், வெற்றிபெற்றவர்களாகவும் இருப்பது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகம் இது. அதிலும் தோல்வியுற்றவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் தேவையான உத்திகளை தெளிவாய்ச் சொல்கின்றது. பிரச்சினைகளை துணிச்சலுடன் சந்தித்து எப்படி புதிய வெற்றிப்படிகளில் ஏறிச்செல்வது என்றும் தெளிவுபடச் சொல்கின்றார் ஆசிரியர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
11 hours ago
ஓடிடி களம்
11 hours ago
இந்தியா
11 hours ago