பிரீபெய்ட் கார்டு வரம்பு அதிகரிப்பு: ஆர்.பி.ஐ.

By செய்திப்பிரிவு

பிரீபெய்ட் கார்டுகளுக்கான வரம்பை 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்ச ரூபாயாக ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் அந்த கார்டில் இருக்கும் தொகை ஒரு போதும் ஒரு லட்ச ரூபாய்க்கு மேலே இருக்க கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

மேலும் வங்கிகள் வழங்கும் கிப்ட் கார்டுக்கான காலத்தை ஒரு வருடத்திலிருந்து மூன்று வருடமாகவும் ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. மேலும் ஒரு வங்கி கணக்கில் குடும்பத்தில் இருக்கும் பலருக்கும் கிப்ட் கார்டுகள் வழங்கலாம் என்றும் ஆனால் ஒருவருக்கு ஒரு கார்டு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

மேலும் வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு ரூபாய் அடிப்படையிலான பிரீபெய்ட் கார்டுகளை வழங்குவதற்கும் ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த பிரீபெய்ட் கார்டை வெளிநாட்டில் இருக்கும் வங்கி கிளை மூலமாக மட்டுமே வழங்க இயலும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதில் கார்டில் அதிகபட்சமாக இரண்டு லட்ச ரூபாய் வரைக்கும் வைத்துக்கொள்ள முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

3 mins ago

இந்தியா

57 mins ago

சுற்றுச்சூழல்

4 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்