கார் விற்பனையில் மாருதி முன்னிலை

By செய்திப்பிரிவு

மாருதி சுசூகி 11.48 லட்சம் கார்களை நடப்பாண்டில் விற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் 8,35,912 கார்களை விற்றிருக்கிறது. கடந்த வருடத்தின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 13.1 சதவீத வளர்ச்சியாகும்.

இதுவரை இல்லாத அளவு 2014-ம் ஆண்டில் நாங்கள் விற்றிருக்கிறோம். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு 10.60 லட்சம் கார்களை நாங்கள் விற்பனை செய்தோம் என்று மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் டீலர்களை நியமித்ததுதான் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது. நடப்பாண்டின் ஆரம்பத்தில் 1,200 விற்பனை மையங்கள் இருந்தது. இப்போது 1,430 விற்பனை மையங்கள் இருப்பதாக நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆர்.எஸ்.கல்சி தெரிவித்தார்.

கடந்த 4-5 வருடங்களில் விற்பனையில் வளர்ச்சி அதிகம் இருந்தது நடப்பாண்டில்தான். நிதி ஆண்டு அடிப்படையில் இரட்டை இலக்க வளர்ச்சி அடைவோம் என்று கல்சி தெரிவித்தார்.

இப்போது நிறுவனத்தின் சந்தை பங்கு 44.8 சதவீதமாக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்