மத்திய பட்ஜெட்; அடுத்த 10 ஆண்டுகளை இலக்காக கொண்டது: நிர்மலா சீதாராமன் விளக்கம்

By செய்திப்பிரிவு

நாட்டின் வளர்ச்சியையும் அடுத்த 10 ஆண்டுகள் இலக்கையும் கொண்டு மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும் வரி விலக்கு பெறுவதில் புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

பட்ஜெட் குறித்து பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய பட்ஜெட் திட்டங்கள், சலுகைள், அறிவிப்புகள் மட்டுமல்லாமல் அடுத்த 10 ஆண்டுகளை இலக்காக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இலக்கை அடைவதற்கான கொள்கைகளுக்கு செயல்வடிவம் அளித்துள்ளோம். பட்ஜெட்டில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என பல தரப்பினரையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.

வளர்ச்சியை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் நம்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க பட்ஜெட் உந்து சக்தியாக விளங்கும். நகர்புற மக்கள் மேம்படவும், அதேசமயம் கிராமப்புற மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டதாகவும் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 mins ago

சினிமா

3 hours ago

ஓடிடி களம்

33 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்