முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சம்பிரதாயத்துக்காக நடத்தக் கூடாது: செபி தலைவர் யூ.கே. சின்ஹா கருத்து

By பிடிஐ

முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சம்பிரதாயத்துக்கு நடத்த கூடாது. அந்த நிகழ்ச்சிகளில் தரம் இருக்க வேண்டும் என்று பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் யூ.கே.சின்ஹா தெரிவித்தார். மும்பை பங்குச்சந்தையின் முதலீட்டாளர் சேவை மையத்தின் திறப்பு விழாவில் சின்ஹா இவ்வாறு கூறினார்.

இப்போதைக்கு பல சிறுமுதலீட் டாளர்கள் பங்குச்சந்தை முதலீடு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 2008-ம் ஆண்டு அளவுடன் ஒப்பிட முடியாவிட்டாலும் வர்த்தகத்தின் அளவு அதிகரித்திருக்கிறது. இப்போதைக்கு நம்முடைய இலக்கு முதலீட்டாளர்களுக்கு தேவையான முறைப்படுத்தப்பட்ட சந்தைதான். செபி எடுத்துவரும் நடவடிக்கைகளை அமெரிக்கா உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகள் கூட இன்னும் எடுக்கவில்லை என்றார் சின்ஹா.

சிறு முதலீட்டாளர்களை பாது காப்பதில் இந்தியா 7-வது இடத்தில் இருப்பதாக உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை சின்ஹா சுட்டிக்காட்டினார். அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் பின் தங்கி இருக்கிறார்கள். முதலீட்டாளர்களை பாதுகாப்பதில் நியூ சிலாந்து முதல் இடத்திலும், ஹாங் காங், சிங்கப்பூர், இங்கிலாந்து, மலேசியா மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கின்றன.

முறைகேடான வழிகளில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் தொகையை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக் கை அவசியம். அதே போல வழங்கப்பட்டிருக்கும் நடவடிக் கைகளை சரியாக பயன்ப டுத்த வேண்டும் என்று சின்ஹா தெரிவித்தார். முறைகேடுகளை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. மேலும் 100 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடாக திரட்டிய தொகையை முறைப்படுத்த இப்போது செபிக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

முதலீட்டாளர் சேவை மையம்

பங்குச்சந்தை முதலீட்டாளர் களுக்கு தேவையான முதலீட்டாளர் சேவை மையத்தை புதுடெல்லியில் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பி.எஸ்.இ.) திறந்தது. முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் அவர்களின் குறைகளுக்கு தீர்வுகள் காணவும் இந்த மையம் அமைக்கப்பட்டது. பி.எஸ்.இ. ஏற்கெனவே 16 இடங்களில் இதுபோன்ற முதலீட்டாளர் சேவை மையத்தை அமைத்திருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்