ஏர் இந்தியா பங்கு விற்பனை: இண்டிகோ புதிய திட்டம்

By செய்திப்பிரிவு

ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகளை மட்டும் வாங்க இண்டிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு செயல்பாடுகளை வாங்கும் திட்டமோ அல்லது ஒட்டுமொத்தமாக அளித்தால் இரண்டையும் சேர்த்து வாங்கும் திட்டமோ கிடையாது என்று இண்டிகோ நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இண்டிகோ நிர்வாகம் மேலும் கூறியிருப்பதாவது: ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த கடனையோ அல்லது ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களையோ வாங்கும் திட்டம் இல்லை. தவிர அது சாத்தியமும் இல்லை. அதேபோல மத்திய அரசுடன் எந்தவிதமான கூட்டு ஒப்பந்தம் அமைக்கும் திட்டமும் இல்லை. சர்வதேச செயல்பாடுகளில் மத்திய அரசின் பங்கு ஏதுவும் இருக்கக் கூடாது என இண்டிகோ விளக்கி இருக்கிறது.

அரசுடன் இணைந்து பணியாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இண்டிகோ அந்த முடிவை எடுக்காது என நிறுவனர் ராகேஷ் கங்வால் தெரிவித்தார். அரசாங்கத்தின் பங்கு குறைவாக இருந்தால் கூட இண்டிகோ ஏலத்தில் பங்கேற்காது. சர்வதேச செயல்பாடுகளை வாங்குவதன் மூலம் குறைந்த கட்டண விமானங்களை இயக்கும் திட்டத்தையும் இண்டிகோ வைத்துள்ளது. ஏர் இந்தியாவின் சேவைகளை இண்டிகோ கையகப்படுத்தும் பட்சத்தில் பட்ஜெட் விமான நிறுவனமாக மாறும். ஏர் இந்தியாவை பட்ஜெட் விமான நிறுவனமாக மாற்றுவதில் பெரிய சவால் ஏதும் இல்லை என இண்டிகோ நிறுவனர்களில் ஒருவரான ராகுல் பாட்டியா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்