பாதுகாப்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு

By பிடிஐ

பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்கு ஏற்ப விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் ரூ.35,000 கோடி அந்நிய முதலீட்டை ஈர்க்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்புத் துறைக்கான கருவிகள் உற்பத்தியை இரட்டிப்பாக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தளர்த்தப்படும் புதிய விதிமுறைகள்படி, பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் ராணுவ விமானங்கள் தயாரிப்பில் அந்நிய நேரடி முதலீட்டின் கீழ் தடையற்ற முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

தடையற்ற அந்நிய நேரடி முதலீட்டின் கீழ் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தயாரிப்பில் 76 சதவீதம் அனுமதிக்கவும், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் போர் கப்பல்கள் தயாரிப்பில் 51 சதவீதத்தை அனுமதிக்கவும் ஆலோசித்து வருகிறது. இதன் மூலம் பாதுகாப்பு துறையின் 70 சதவீத இறக்குமதியைக் குறைக்க முடியும். இந்த புதிய விதிமுறைகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 mins ago

இந்தியா

43 mins ago

கல்வி

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

உலகம்

11 hours ago

வாழ்வியல்

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

மேலும்