ஜோஹோ ஒன் இயங்குதளம் அறிமுகம்

By செய்திப்பிரிவு

சென்னையை சேர்ந்த ஜோஹோ நிறுவனம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான செயலிகளை ஒன்றாக இணைத்து `ஜோஹோ ஒன்’ என்னும் இயங்கு தளத்தை நேற்று அறிமுகம் செய்தது. இதில் ஜோஹோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 38 செயலிகளையும் தொழில் நிறுவனங்கள் ஒன்றாக பயன்படுத்த முடியும்.

இதற்கான கட்டணமாக ஒரு பணியாளர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. தவிர சர்வதேச அளவில் இந்த தளத்தை பயன்படுத்த முடியும். அமெரிக்காவில் ஒரு பணியாளருக்கு 30 டாலர், (மாதம்), இங்கிலாந்து 30 பவுண்டு, ஐரோப்பிய யூனியனில் 30 யூரோ என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ஜோஹோ ஒன் - யை பயன்படுத்த விரும்பம் தெரிவித்திருகின்றன.

இந்த தளத்தை தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாமல் காப்பீட்டு முகவர், ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் என தனிநபர் சார்ந்த தொழில் நிறுவனங்களும் ஜோஹோ தளத்தை பயன்படுத்த முடியும். எங்களுடைய முக்கியமான சந்தையாக அமெரிக்கா இருக்கிறது. இந்தியா முதல் ஐந்து இடங்களில் உள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் எங்களது இந்திய பிரிவு வருமானம் இரண்டாம் இடத்துக்கு வரும் என நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்