விமான டிக்கெட் முன்பதிவு: லாபம் ஈட்டும் இபிபோ

By செய்திப்பிரிவு

ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் இணையதள நிறுவனமான இபிபோ விமான டிக்கெட் முன்பதிவு மூலம் லாபம் ஈட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக பங்குச் சந்தைக்கு அளித்துள்ள தகவலில் கடந்த நிதி ஆண்டில் விமான டிக்கெட் முன் பதிவில் லாபம் ஈட்டப்பட்டுள்ள தாகத் தெரிவித்துள்ளது.

தினசரி 2 லட்சம் பேர் விமானத் தில் பயணிக்கின்றனர். இருப்பினும் எதிர்காலத்தில் இது வளர்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும் இபிபோ குழுமத்தின் நிறுவனர் ஆஷிஷ் காஷ்யப் கூறினார்.

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் ஆன்லைன் பயண வர்த்தகம் 900 கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நிறுவனங்களுக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. தற்போது ஹோட்டல்களின் வர்த்தகம் 13% அளவுக்கு ஆன்லைன் மூலம் நடைபெறுகின்றன. இது 40% அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் டிராவல் வர்த்தகம் மூலம் நிறுவனத்தின் வருமானம் 9 கோடி டாலரை எட்டியுள்ளதாகவும் உள்நாட்டு வர்த்தகத்தில் 67% அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இபிபோ-வின் பஸ் டிக்கெட் வர்த்தக அமைப்பான ரெட் பஸ் 37% வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் இது மேலும் பல வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் காஷ்யப் தெரிவித்தார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்