அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 காசுகள் குறைந்து 61.43 ஆக வர்த்தகமாகியிருந்தது.
கடைசியாக. வெள்ளிக்கிழமை மாலை அந்நிய செலாவணி சந்தையில் வர்த்தக நேர முடிவின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு 61.27 என்ற நிலையில் இருந்தது.
வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதாலும் சர்வதேச நாடுகளில் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்துள்ளதாலும் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் டெஹ்ரிவித்துள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை நிலவரம்:
ஆசிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. நவம்பர் டெலிவரிக்கான, நியூயார்க் மெயின் கான்ட்ராக்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 10 சென்டு அதிகரித்து 100.91 அமெரிக்க டாலராகவும், பிரன்ட் நார்த் ஸீ கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 12 சென்டு அதிகரித்து 110.06 அமெரிக்க டாலராகவும் வர்த்தகமாகியிருந்தன.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
19 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago