கறுப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வரும் பிஎம்ஜிகேஒய் திட்டத்தின்கீழ் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் ஏற்பதற்கு தடை

By பிடிஐ

கறுப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வருவதற்காக கொண்டுவந்துள்ள பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் (பிஎம்ஜிகேஒய்) டெபாசிட்டுகளை கூட்டுறவு வங்கிகள் ஏற்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்குப் பிறகு கூட்டுறவு வங்கிகள் குறித்து வருமான வரித்துறை தெரிவித்த அதிருப்தியான தகவலின் அடிப்படையில் மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பண மதிப்பு நடவடிக்கைக்குப் பிறகு கணக்கில் காட்டப்படாத பணத்தை (கறுப்புப் பணம்) வைத் திருப்பவர்கள் தங்களிடம் உள்ள தொகையில் 50 சதவீதத்தை வரி யாக செலுத்த வேண்டும். மீத முள்ள தொகையில் நான்கில் ஒரு பங்குத் தொகை நான்கு ஆண்டு களுக்கு வட்டியில்லா தொகை யாக வங்கியில் இருப்பு வைக்கப் பட வேண்டும். இந்தத் திட்டத் துக்கு பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என பெயரிடப்பட்டுள் ளது. தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வருவதற்காக மத்திய அரசு இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி எந்த வங்கியில் வேண்டு மானாலும் பணத்தைச் செலுத்த லாம் என முன்னர் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின்கீழ் மார்ச் 31-ம் தேதி வரை பணத்தைச் செலுத்தி கறுப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வரலாம்.

ஆனால் இப்போது இந்தத் திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கி களில் பணம் செலுத்தத் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் பிஎம்ஜிகேஒய் திட்டத்தின் கீழ் பணத்தை செலுத்த முடியும். முதலில் வரித் தொகையைச் செலுத்தி இந்தத் திட்டத்தின் பலனைப் பெற முடியும். வங்கியில் நான்கு ஆண்டுகளுக்கு வட்டியில் லாத இருப்புத் தொகைக்கான சலானை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

இத் திட்டத்தின் கீழ் பணத்தை வாங்க அனுமதி அளிக்கப்பட்ட வங்கிகள் பணத்தை ஏற்று அதை வருவாய்த்துறையில் அடுத்த வேலை நாளில் செலுத்த வேண்டும். அதன்பிறகு பணம் செலுத்திய நபர் குறித்த விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு இத்தொகையை பிஎம்ஜிகேஒய் திட்டத்தில் சேர்க்கலாமா என்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்து அதை சம்பந்தப்பட்ட வங்கிக்கு அறிவிக்கும்.

பண மதிப்பு நீக்க நடவடிக் கைக்குப் பிறகு கூட்டுறவு வங்கிகளில் பல முறைகேடு நடை பெற்றதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சில கூட்டுறவு வங்கிகளில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது மாற்றித் தரப்பட்ட தொகை தொடர்பாக பெறப்பட்ட விவரங்களைக் காட்டிலும் கூடுதல் தொகை வழங்கப்பட்டிருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது பெறப்பட்ட ரூ. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.16 ஆயிரம் கோடியாகும். முதல் 6 நாள்கள் மட்டுமே கூட்டுறவு வங்கிகளில் பணம் மாற்றித் தர ரிசர்வ் வங்கி அனுமதித்தது. பின்னர் அதை நிறுத்திவிட்டது. பல்வேறு கணக்குகளில் இத் தொகை டெபாசிட் செய்யப்பட் டுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் தங்கள் சேமிப்புக் கணக்குகளில் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு களை டெபாசிட் செய்ய அனுமதிக் கப்பட்டது. இதன்படி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ. 15.44 லட்சம் கோடியாகும்.

ஒரு ஆண்டில் ரூ. 10 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் கார்டில் ரூ. 1 லட்சம் வரை பண பரிவர்த்தனை மேற்கொண்டவர்கள் பற்றிய விவரத்தை வருமான வரித்துறை கோரியுள்ளது.

அதேபோல நவம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை எந்த வங்கி கணக்கில் ரூ. 2.5 லட்சம் தொகைக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் கோரியுள்ளது. இவ்விதம் பணம் செலுத்தப்பட்ட வங்கிக் கணக்கின் பான் எண் விவரம் மற்றும் அந்த வாடிக்கையாளர் பற்றிய தகவலையும் வங்கிகளிடம் வருமான வரித்துறை கோரியுள்ளது.

டிசம்பர் 30 வரையான காலத் தில் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ. 4 லட் சம் கோடி வரையான வரித்தொகை வசூலாகியுள்ளன.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்