கறுப்புப் பணம் பற்றிய இணையதள தகவல்: பதிவானது 45,000, உண்மையானது 6,000

By பிடிஐ

கறுப்புப் பணம் வைத்திருப்போர் பற்றிய தகவல் தெரிவிப்பதற்கு மத்திய அரசு ஒரு இணைய தளத்தை உருவாக்கியிருந்தது. இதில் தகவல் தெரிவிப்பவர் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 45 ஆயிரம் மின்னஞ் சல்கள் வருமான வரித்துறைக்கு வந்தன. ஆனால் விசாரித்ததில் 6 ஆயிரம் மின்னஞ்சல் மட்டுமே உண்மையானவை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை என்றும் கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் குறித்த தகவலை blackmoneyinfo@incometax.gov.in எனும் முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டது.

போலியானவை

டிசம்பர் மாதம் வரை இந்த இணையதள முகவரிக்கு 45 ஆயிரம் மின்னஞ்சல்கள் வந்துள் ளன. விவரங்கள் வந்த இணைய தள முகவரியின் நம்பகத் தன்மை குறித்து ஆராய்ந்தபோது அவற்றில் 6,000 மட்டுமே உண்மையானவை என்பது தெரியவந்துள்ளது. வந்திருந்த தகவல்களில் 4 ஆயிரம் பேர் பற்றிய தகவல்கள் மிகவும் உபயோகமானவை என்றும் வரித்துறை தெரிவித்துள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை யின்போது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றதையும் இக்குழு கண்டுபிடித்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் மட்டும் வருமான வரித்துறைக்கு 22,500 இணைதள புகார்கள் வந்தன. சம்பந்தபட்டவர்கள் சட்ட விரோத பரிவர்த்தனையில் ஈடுபடுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனவரி மாதத்தில் 6,900 புகார் களும், பிப்ரவரி மாதம் 3,465-ம் மார்ச் மாதம் 3 ஆயிரம் புகார்களும் வந்தன. ஜூன் மாதத்தில் 1,082 புகார்கள் பதிவாகியுள்ளன.

தகவல் வந்த பெரும்பாலான இணையதளத்தில் குறிப்பிட்ட விவரங்கள் மிகவும் மேலெழுந்த வாரியாக இருந்தன. தீவிரமாக விசாரித்ததில் 6 ஆயிரம் புகார் கள்தான் உண்மையானவை என்பது தெரியவந்துள்ளது.

கறுப்புப் பண விவரம் தெரி விக்க இந்த இணையதள முக வரியை தொடங்கிவைத்தபோது வருவாய்த்துறை செயலர் ஹஷ்முக் ஆதியா குறிப்பிட்ட தாவது: இந்த இணையதள முகவரியில் பெறப்படும் தகவல் உடனுக்குடன் வருமான வரித் துறையினருடன் பகிர்ந்து கொள் ளப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வழியேற்படுத்தப்படும் என்றார். அளிக்கப்படும் தகவல் களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகே முடிவெடுக்கப் படும் என்றார். முன் விரோதம் அல்லது பழிவாங்கும் போக்கில் இணையதளத்தில் வரும் தகவல் களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் சுட்டிக் காட்டியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 hours ago

இந்தியா

42 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்