‘ரிலையன்ஸ் ஜியோவில் கால் டிராப் நிகழாது’

By செய்திப்பிரிவு

ஜியோ நெட்வொர்க்கில் செல் போனில் பேசும்போது தொடர்பு அறுபடும் நிலை ஏற்படவே ஏற்படாது என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரு வேறு செல்போன் நிறுவன நெட்வொர்க் இடையிலான செல் போனில் பேசும்போது பாதியில் தொடர்பு அறுபடுவது சர்வசா தாரணம். ஒரு நாளைக்கு 2 கோடிக் கும் அதிகமான தகவல் தொடர்பு அறுபடுதல் நிகழ்வு நடப்பதாக (கால் டிராப்) தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் ஜியோ நெட்வொர்க் இடையே, அதாவது ஜியோ இணைப்பு வைத்துள்ள ஒருவர் மற்றொரு ஜியோ நெட்வொர்க் பயனாளியுடன் தொடர்பு கொண்டு பேசினால் அது பாதியில் அறுபடுவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் ஹெச்டி தரத்திலான குரல்வழி சேவையை அளிக்கிறது. இதனால் ரயிலிலோ அல்லது பேருந்திலோ பயணம் செல்லும்போது கூட தகவல் தொடர்பு அறுந்துபோகாது என்றும் தெரிவித்துள்ளது.

பிற தொலைத் தொடர்பு நிறுவ னங்களின் சேவையைப் பயன் படுத்தும் வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவன சேவையை விரும்பும் அதேவேளையில் தாங்கள் வைத்துள்ள அதே எண்ணை தக்கவைத்துக் கொள்வதற்காக எம்என்பி (மொபைல் நம்பர் போர்டபிளிட்டி) வசதியை தேர்வு செய்கின்றனர். ஆனா பிற நிறுவனங்களோ அத் தகைய வசதியை செய்து தர தயங் குகின்றன. இதுபோல எண் மாற்றம் செய்யாத வாடிக்கையாளர்கள் நிறுவனத்தை அணுகியபோது அவர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஜியோ பேச்சு நடத்தி அதை நிறைவேற்றச் செய் துள்ளது. ஆனால் இது பெரு மளவிலான வாடிக்கையாளர் களுக்கு சாத்தியமாகது.

எம்என்பி மாற்றத்துக்கான விண்ணப்பத்தை ஏர்டெல் நிறு வனம் ஏற்று அதை அனுமதிப் பதாகத் தெரிவித்துள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான விண்ணப் பங்களை அனுமதிப்பதாகக் குறிப் பிட்டுள்ளது. ஆனால் இதுவரை யில் ஒரு விண்ணப்பத்தைக் கூட அந்த நிறுவனம் செயல் படுத்தவில்லை. ஜியோ நெட் வொர்க்கிற்கு மாறுவதற்கான விண்ணப்பத்தை வேண்டு மென்றே அந்நிறுவனம் தாமதப் படுத்துவதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்