அந்நிய மறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுமதி: ஐஆர்டிஏ தலைவர் விஜயன் தகவல்

By பிடிஐ

சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள மறு காப்பீட்டு நிறுவனங்கள் விரைவில் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளைத் தொடங்க உள்ளன என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏ) தலைவர் விஜயன் கூறினார்.

தற்போது இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான ஜிஐசி நிறுவனம் மட்டுமே மறு காப்பீட்டு பணிகளை மேற்கொள்கிறது.

சர்வதேச அளவில் மூனிச் ஆர்இ, ஸ்விஸ் ஆர்இ, ஸ்கோர், ஹனோவர் ஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் மறு காப்பீட்டில் ஈடுபட்டுள்ள பிரபல மான நிறுவனங்களாகும். பொது வாக அந்நிய காப்பீட்டு நிறுவனங் கள் இங்கு செயல்பாடுகளைத் தொடங்க ஆர்1 லைசென்ஸ் பெற வேண்டும். அடுத்த கட்டமாக ஆர்2 மற்றும் ஆர்3 லைசென்ஸ்களைப் பெற வேண்டும்.

மூன்று கட்ட லைசென்ஸைப் பெற்ற பிறகுதான் அந்நிய மறு காப்பீட்டு நிறுவனங்கள் இங்கு கிளைகளைத் தொடங்க முடியும். இது தொடர்பாக சில நிறுவனங்கள் ஐஆர்டிஏ-வை அணுகியுள்ளதாக விஜயன் குறிப்பிட்டார்.

குறைந்தபட்சம் 6 நிறுவனங்கள் இங்கு கிளைகள் தொடங்க அனுமதி கோரியுள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனுமதி பெற்று அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கு கிளைகளை அமைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐஆர்டிஏ இயக்குநர் கூட்டத்தில் இந்நிறுவனங்களுக்கு ஆர்2 அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றார்.

இது தொடர்பான வரைவு அறிக்கை தயாரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நிறுவனங்கள் இது தொடர்பான அறிக்கையை பார்க்க வேண்டும் என வற்புறுத்துகின்றன. இது தொடர்பாக இறுதி அறிக்கை தயாரிக்கும் நிலையை எட்டவில்லை என்றார்.

பொது காப்பீட்டு நிறுவனங் களைப் பொறுத்தமட்டில் அவை களைப் பட்டியலிடலாம் என அரசு அறிவித்துவிட்டது. ஆனால் இது தொடர்பாக எவ்வித அதிகாரபூர்வ ஆணையும் வெளியாகவில்லை என்றார் விஜயன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 mins ago

கல்வி

28 mins ago

தமிழகம்

40 mins ago

கல்வி

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்