பணவீக்கம் 5 ஆண்டுகளில் முதன்முறையாக 1.77% ஆக குறைவு

By பிடிஐ

நாட்டின் மொத்த விலைக் குறியீட்டு எண் (WPI) அடிப்படையிலான பணவீக்கம் 5 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. இதன்படி, கடந்த அக்டோபர் மாதத்துக்கான பணவீக்கம் 1.77 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.38 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதம் இது 3.74 சதவீதமாக இருந்தது.

தொடர்ந்து 5 மாதங்களாக மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் குறைந்து வருகிறது.

உணவு மற்றும் எரிபொருள் விலை குறைந்ததன் காரணமாகவே அக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் இந்தளவு குறைந்திருக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அக்டோபர் மாதத்திற்கான நாட்டின் சில்லறை விலைக் குறியீட்டு எண் 5.52 சதவீதமாக குறைந்ததன் எதிரொலியாகவே, அதே மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண் (WPI) அடிப்படையிலான பணவீக்கமும் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது வெங்காய விலை 59.77 சதவீதம் குறைந்துள்ளது. மற்ற காய்கறிகள் விலை, 19.61 சதவீதம் குறைந்துள்ளது.

செப்டம்பரில் 90.23 சதவீதமாக இருந்த உருளைக்கிழங்கு மீதான பணவீக்கம் அக்டோபரில் 82.11 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

இதேபோல் உற்பத்தி பொருட்களான சர்க்கரை, எண்ணெய், குளிர்பானங்கள், சிமென்ட் மீதான பணவீக்கமும் 2.43 சதவீதம் குறைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

43 mins ago

ஜோதிடம்

59 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்