இவரைத் தெரியுமா?- க்ளாஸ் ஷ்வாப்

By செய்திப்பிரிவு

உலக பொருளாதார மையத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர். 1971-ம் ஆண்டு இந்த மையத்தைத் தொடங்கினார்.

ஐரோப்பிய மேலாண்மை மையமாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பை, 1987-ம் ஆண்டு உலக பொருளாதார மையமாக, லாப நோக்கமற்ற நிறுவனமாக உருவாக்கினார்.

உலக அளவிலான பொருளா தார போக்குகளை விவாதிக் கும் விதமாக, சர்வதேச அளவில் 40 வயதுக்குட்பட்ட அரசியல் / நிறுவன தலைவர்களை ஒருங்கிணைத்தவர்.

ஜெர்மனியின் ராவென்ஸ்பெர்க்கில் 1938-ம் ஆண்டு பிறந்தவர்.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள ப்ரிபர்க் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் ஆராய்ச்சி பட்டமும், ஸ்விஸ் பெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் ஆராய்ச்சி பட்டமும் பெற்றவர். உலக அளவில் பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி பட்டங்களை பெற்றுள்ளார்.

இளம் வயதிலேயே ஜெனிவா பல்கலைக்கழகத்தில் பேராசிரிய ராக பணிக்குச் சேர்ந்தவர். சீன வெளிநாட்டு விவகார பல்கலைக் கழகம் உள்பட பல கல்வி நிறுவனங்களில் கவுரவ பேராசிரியராக உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

சினிமா

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்