ஆர்பிஎல் வங்கி ஐபிஓ இன்று வெளியீடு

By ஐஏஎன்எஸ்

வங்கிகள் முதலீடுகளைத் திரட்ட திணறிவரும் வேளையில் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஆர்பிஎல் வங்கி பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் நிதி திரட்டத் திட்டமிட்டுள்ளது. இப்பொதுப் பங்கை இன்று முதல் (ஆக.19) வாங்கலாம்.

ரத்னாகர் பேங்க் லிமிடெட் என்று முன்னர் அழைக்கப்பட்ட இந்த வங்கி தற்போது ஆர்பிஎல் வங்கி என்றாகியுள்ளது. பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ. 1,200 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

நிதி சார்ந்த முதலீடுகளை மேற்கொள்ள இந்த வங்கி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக உத்கர்ஷ் மைக் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சிறிதளவு பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் சிறிய வங்கி தொடங்க விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வங்கி ராயல் பாங்க் ஸ்காட்லாந்தின் வர்த்தக வங்கி யாகும். கிரெடிட் கார்டு மற்றும் அது சார்ந்த தொழில்களை 2014-ம் ஆண்டு கையகப்படுத்தியது.

இது தவிர ஸ்்வாதார் பின் சர்வ் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தில் சிறிதளவு பங்குகளை ஆர்பிஎல் வாங்கியுள்ளது.

பொதுப் பங்கு வெளியீட்டில் புதிதாக ரூ.832.50 கோடிக்கு பங்குகளை வெளியிடவும், ஆஃபர் ஃபார் ஷேர் எனும் பிரிவின் கீழ் ஏற்கெனவே உள்ள பங்குதாரர்களுக்கு பங்குகளை விற்பனை செய்வதன் மூலமும் திரட்ட திட்டமிட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் தனியார் வங்கி ஐபிஓ வெளியீட்டில் இறங்குவது இதுவே முதல் முறையாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

33 mins ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்