அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலில் ஷாரூக், சல்மான், அக்‌ஷய்

By பிடிஐ

உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலில் இந்திய திரைப்பட நடிகர்களான ஷாரூக் கான், அமிதாப் பச்சன், சல்மான் கான், அக்‌ஷய் குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டிய லில் ஹாலிவுட் நடிகர்களான ராபர்ட் டொவ்னே, பிராட் பிட் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். திரைத் துறைக்கு வந்த மல்யுத்த வீரரான டுவைன் ஜான்சன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் ஷாரூக் கான் 8-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது வருமானம் 3.3 கோடி டாலர் (இந்தியா ரூபாயில் 221,19,90,000). ஹாலிவுட் நடிகரான ராபர்ட் டொவ்னேவும் 8-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு நடிகரான அக்‌ஷய் குமார் இந்தப் பட்டியலில் 10-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது வருமானம் 3.1 கோடி டாலர் (ரூ. 207,79,30,000). ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும் 10-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளார். இவரது வருமானம் 2.85 கோடி டாலர் (ரூ. 191,03,55,000). இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்கர் விருது வென்ற லியார்னடோ டிகாப்ரியோ 15-வது இடத்தில் உள்ளார். இவரது வருமானம் 2.7 கோடி டாலர். `இண்டிபெண்டன்ஸ் டே’ படத்தின் கதாநாயகன் வில் ஸ்மித் இந்தப் பட்டியலில் 17-வது இடத்தில் உள்ளார். இவரது வருமானம் 2.05 கோடி டாலர்.

அமிதாப் பச்சன் இந்தப் பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளார். இவரது வருமானம் 2 கோடி டாலர் (ரூ. 134,06,00,000). ஆஸ்கர் விருது பெற்ற மேத்யூ மெக்கானாகே 19-வது இடத்திலும் `ஸ்டார் வார்ஸ்’ படத்தின் கதாநாயகன் ஹாரிஷன் போர்டு 20-வது இடத்திலும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

உலகம்

10 hours ago

வாழ்வியல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்