கேபிள் தயாரிப்பில் இறங்கியது சிஆர்ஐ பம்ப்ஸ் நிறுவனம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டை சேர்ந்த சிஆர்ஐ பம்ப்ஸ் நிறுவனம் கேபிள் மற்றும் வயர் பிரிவில் இறங்கியுள்ளது. ஆரம்பகட்டமாக ரூ.125 கோடியை முதலீடு செய்துள்ளது. 2021-ம் ஆண்டில் ரூ.5,000 கோடி வருமானம் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இதில் கேபிள் மற்றும் வயர் பிரிவு வருமானம் ரூ.1,100 கோடிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

முதல் கட்டமாக ரூ.125 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 10,000 டன் அளவுக்கு உற்பத்தி செய்ய முடியும். இவற்றின் மதிப்பு ரூ.500 கோடி அளவுக்கு இருக்கும். இரண்டாம் கட்டமாக அடுத்த மூன்று வருடங்களில் உற்பத்தி திறனை இருமடங்காக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக சிஆர்ஐ குழுமத்தின் துணைத்தலைவர் ஜி.சௌந்தரராஜன் தெரிவித் திருக்கிறார்.

இந்தியாவின் கேபிள் மற்றும் வயர் பிரிவின் சந்தை ஆண்டுக்கு ரூ.40,000 கோடி ஆகும். இதில் சிஆர்ஐ நிறுவனம் செயல்படும் பிரிவின் சந்தை ரூ.14,000 கோடி. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த சந்தை மதிப்பு ரூ.25,000 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதில் 5 சதவீத சந்தையை கைப்பற்ற நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

32 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்