பிப்ரவரி 3-ல் பிஎஸ்இ பங்கின் வர்த்தகம் தொடங்குகிறது

By செய்திப்பிரிவு

ஆசியாவின் பழமையான பங்குச்சந்தை நிறுவனமான பிஎஸ்இ வரும் பிப்ரவரி 3-ம் தேதி வர்த்தகத்தை தொடங்குகிறது.

இந்த நிறுவனத்தின் ஐபிஓ கடந்த 23 முதல் 25-ம் தேதி வரை நடந்தது. ஒரு பங்கின் விலையாக ரூ.805-806 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. ரூ.1,243 கோடி திரட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் 51 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

கடந்த 2016-ம் ஆண்டு 26 நிறுவனங்களின் ஐபிஓ வெளியானது. இந்த நிறுவனங்கள் ரூ.26,000 கோடி அளவுக்கு நிதி திரட்டன. கடந்த 2010-ம் ஆண்டுக்கு பிறகு அதிக தொகை கடந்த ஆண்டுதான் பங்குச்சந்தையில் திரட்டப்பட்டது. இந்த ஆண்டில் முதலில் பட்டியலிடப்படும் நிறுவனம் பிஎஸ்இ ஆகும்.

பிஎஸ்இ-யின் போட்டி நிறுவனமான என்எஸ்இயும், பொதுப்பங்கு வெளியிடுவதற்காக செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது.

சந்தை மதிப்பு அடிப்படையில் சர்வதேச அளவில் பத்தாவது இடத்தில் பிஎஸ்இ உள்ளது. பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,13,87,346 கோடி ஆகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்