எஸ்பிஐ துணை வங்கிகளை இணைக்க மத்திய அரசு ஒப்புதல்: அடுத்த நிதி ஆண்டில் துணை வங்கிகள் இணைக்கப்படும் என எஸ்பிஐ தகவல்

By செய்திப்பிரிவு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வுடன் (எஸ்பிஐ) ஐந்து துணை வங்கிகளை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. கடந்த மே மாதம் எஸ்பிஐ வங்கி இதற்கான பரிந்துரையை வழங் கியது. மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கி இருந்தது. தற்போது, கடந்த புதன் கிழமை மத்திய அமைச்சரவை ஐந்து துணை வங்கிகளை இணைக்க அனுமதியை வழங்கி உள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து வங்கிகள் இணைவதற்கு ஒப் புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் மூன்று வங்கிகள் பட்டியலிடப் பட்டவை ஆகும். ஏற்கெனவே இந்த பரிந்துரையில் பாரதிய மகிளா வங்கியையும் இணைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் மத்திய அரசின் அனுமதி பட்டியலில் இந்த வங்கி இல்லை.

மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தாலும் அடுத்த நிதி ஆண் டில்தான் வங்கிகள் இணைப்பு சாத்தியம் என எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார். இந்த இணைப்புக்கு பிறகு உலகின் பெரிய 50 வங்கிகளின் பட்டியலில் எஸ்பிஐ இருக்கும், இணைப்புக்கு பிறகு டெபாசிட் மற்றும் கடன்களில் 25 சதவீதம் எஸ்பிஐ வசம் இருக்கும் என தெரிவித்தார்.

வங்கிகள் இணைந்த பிறகு கிளைகளின் எண்ணிக்கை 23,000 ஆகவும், ஏடிஎம்களின் எண் ணிக்கை 58,000 ஆகவும், 50 கோடி வாடிக்கையாளர்களை கொண்ட பெரிய வங்கியாகவும் எஸ்பிஐ இருக்கும். எஸ்பிஐ வசம் தற்போது 36 நாடுகளில் 191 கிளைகள் உள்ளன.

எஸ்பிஐ வங்கி ஏற்கெனவே ஸ்டேட் பேங்க் சவுராஷ்டிராவை 2008-ம் ஆண்டிலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூரை 2010-ம் ஆண்டிலும் வங்கி இணைத்துக்கொண்டது.

பங்குகள் உயர்வு

மத்திய அரசு அனுமதி வழங்கிய தால் துணை வங்கி பங்குகள் உயர்ந்தன. ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் பங்கு 3.5%, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் பங்கு 3.65%, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் 4.42%, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 0.58% உயர்ந்து முடிந்தன.

பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.10,000 கோடி போதுமானது

புதுடெல்லி

அடுத்த நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளில் 10,000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதி போதுமானது என வங்கிகள் வாரியத்தலைவர் வினோத் ராய் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் கூறியதாவது: வங்கிகளுக்கு இந்த தொகை போதுமானது, உரிமை பங்குகள் மூலம் வங்கிகள் தங்களுக்கு தேவையான நிதியை திரட்டிக்கொள்ளலாம். வாராக்கடன் வங்கி குறித்து விவாதித்து வருகிறோம். எப்போது அமல்படுத்துவது என்பதில் இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்தியன் ஓவர்சீஸ் வங்கித் தலைவர் நியமனம் குறித்த பரிசீலனைகளை மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம் என்று வினோத் ராய் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

ஓடிடி களம்

7 mins ago

விளையாட்டு

22 mins ago

சினிமா

24 mins ago

உலகம்

38 mins ago

விளையாட்டு

45 mins ago

ஜோதிடம்

27 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்