நீர்வழி பாதை போக்குவரத்தை உயர்த்த திட்டம்: கட்கரி

By செய்திப்பிரிவு

நீர்வழிப்பாதைகளை அதிகரித்து போக்குவரத்து கட்டணங்களை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள் ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது.

மொத்த சரக்கு போக்குவரத்தில் நீர்வழிப்பாதைகள் மூலம் 3.5 சதவீதம் மட்டுமே நடக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் இதனை 15 சதவீதமாக உயர்த்த திட்ட மிட்டிருக்கிறோம். தற்போது சரக்கு போக்குவரத்து கட்டணம் 18 சதவீத மாக இருக்கிறது. அதிகளவு நீர்வழிச் சாலைகளை பயன்படுத்தும்போது இதனை 12 சதவீதமாக குறைக்க முடியும். சீனாவில் 8 சதவீதமாக சரக்கு போக்குவரத்து கட்டணம் இருக்கிறது. இதனை குறைக்க மத்திய அரசு தேவையான நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.

சாலை வழியாக போக்குவரத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1.5 செலவாகிறது. ரயிலில் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.1 செலவாகிறது. ஆனால் நீர்வழிப் போக்கு வரத்தில் இதே தொலைவுக்கு 20 பைசா மட்டுமே செலவாகிறது.

இதனால் நீர்வழிப் போக்கு வரத்தை அதிகரிப்பது மத்திய அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. கப்பல் கட்டும் தளங்களுக்கு மானியம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். 2,000 நீர் துறைமுகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

21 mins ago

ஜோதிடம்

26 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்