மாருதி எஸ் கிராஸ் விலை ரூ.2 லட்சம் வரை குறைப்பு

By பிடிஐ

மாருதி சுஸுகி நிறுவனம் தனது பிரீமியம் ரகக் காரான எஸ் கிராஸ் விலையை ரூ. 2 லட்சம் வரை குறைத்துள்ளது. மொத்தம் 3 மாடல்களில் இது வெளிவந்துள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு இதன் விற்பனை இல்லாததால் விலையை இந்நிறுவனம் குறைத்துள்ளது.

1.6 லிட்டர் இன்ஜின் கொண்ட காரின் விலை ரூ. 2.05 லட்சம் குறைத்துள்ளது. மற்ற இரு மாடல்கள் 1.3 லிட்டர் இன்ஜின் திறன் கொண்டவை. இவற்றின் விலை ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.66 ஆயிரம் வரை குறைக்கப் பட்டுள்ளது. எஸ் கிராஸ் 1.6 லிட்டர் இன்ஜின் கொண்ட காரின் விலை அறிமுகத்தின்போது ரூ. 11.99 லட்சம், ரூ. 12.99 லட்சம் மற்றும் ரூ. 13.74 லட்சம் என்ற விலையில் இருந்தது. விலை குறைப்புக்குப் பிறகு முறையே ரூ. 9.94 லட்சம், ரூ. 10.94 லட்சம் மற்றும் ரூ. 11.69 லட்சம் என்ற விலையில் இது விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு எஸ் கிராஸ் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை இந்நிறுவனத்தின் உயர் ரக விற்பனையகமான நெக்ஸாவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன.

விலை அதிகமாக இருப்பதால் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து விலை குறைப்பு நடவடிக்கையை மாருதி சுஸுகி எடுத்துள்ளது.

விலை குறைப்புக்குப் பிறகு இவற்றின் விற்பனை அதிகரிக்கும் என நம்புவதாக நிறுவனத்தின் சந்தைப் பிரிவு செயல் இயக்குநர் ஆர்.எஸ். கல்சி தெரிவித்துள்ளார்.

நிறுவன இணையதளத்தில் 1.3 லிட்டர் இன்ஜின் எஸ் கிராஸ் காரின் விலையும் குறைக்கப்பட் டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.3 லிட்டர் இன்ஜின் கொண்ட கார் நான்கு மாடல்கள் முறையே ரூ. 8.34 லட்சம், ரூ. 9.15 லட்சம், ரூ. 9.99 லட்சம் மற்றும் ரூ. 10.75 லட்சம் என்ற விலையில் அறிமுகமானது.

கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 17 ஆயிரம் எஸ் கிராஸ் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதில் 1.3 லிட்டர் இன்ஜின் கொண்ட கார்களின் பங்கு 15 ஆயிரமாகும். எஸ் கிராஸ் அறிமுகமாகி 3 மாதம் கழித்து அறிமுகமான பலெனோ கார்களும் இதே நெக்ஸா விற்பனை யகம் மூலம் விற்பனை செய்யப் படுகிறது. கடந்த வாரம்தான் மாருதி சுஸுகி நிறுவனம் பெரும்பாலான கார்களின் விலையை அதிக பட்சம் ரூ.12 ஆயிரம் வரை உயர்த்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

12 mins ago

சுற்றுச்சூழல்

22 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்