திருத்தணியில் டிஐ புதிய ஆலை

By செய்திப்பிரிவு

முருகப்பா குழுமத்தை சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட் (டிஐ) நிறுவனம் திருத்தணியில் புதிய ஆலையை நாளை திறக்க இருக்கிறது. அதிக சுற்றளவுள்ள குழாய்களை தயாரிக்கும் இந்த ஆலை 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் மூலம் 250 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் 150 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் 450 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலை மூலம் மாதத்துக்கு 11,000 டன் குழாய்கள் உற்பத்தி செய்யமுடியும்.

மேலும் இங்கு தயாரிக்கப்படும் குழாய்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் டியூப் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராம்குமார் தெரிவித்தார். இந்த முதலீட்டின் மீதான வருமானம் திரும்ப கிடைப்பதற்கு 7 வருடங்கள் ஆகும்.

முதலீட்டுக்கான சூழ்நிலைகள் சாதகமாக இருக்கிறது. இந்த நிலை தொடரும் போது புதிய முதலீடுகள் செய்யப்படலாம் என்று முருகப்பா குழுமத்தின் துணைத்தலைவர் எம்.எம். முருகப்பன் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி 5.6 சதவீதம் என்று உலக வங்கியின் கணிப்பு சாத்தியமே என்றும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்