இவரைத் தெரியுமா?: கே.சி.சக்ரவர்த்தி

By செய்திப்பிரிவு

* 2009 ஜூன் 25 முதல் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்துவருகிறார். வரும் ஜூன் 15 வரை பதவி காலம் இருந்தாலும், ஏப்ரல் 25-ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார்.

* ஒடிசாவில் பிறந்து ஹிந்து பனாராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.இ. மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்.

* ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவர். அதன் பிறகு 26 வருடங்கள் பேங்க் ஆஃப் பரோடாவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். பேங்க் ஆஃப் பரோடாவின் இங்கிலாந்து பிரிவின் தலைவராகவும் இருந்தவர்.

*அதன் பிறகு இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றிவர்.

* இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வங்கி சார்ந்த பல கமிட்டிகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர்.

* வட்டி விகிதம், வங்கிகளின் வாராக்கடன், ரொக்க கையிருப்பு விகிதம் ஆகியவற்றில் அழுத்தமான கருத்துகளை பதிவு செய்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

இந்தியா

6 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

13 mins ago

சுற்றுச்சூழல்

41 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்