பல துறைகளின் வளர்ச்சியால் வேலை வாய்ப்பு பெருகும்: இணையதள வேலைவாய்ப்பு நிறுவன ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

நடப்பாண்டின் பிற்பாதியில் பல்வேறு துறைகளில் காணப்படும் வளர்ச்சியால் வேலை வாய்ப்பு பெருகும் என்று இணையதள வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சென்னையை முடக்கிய பெரு வெள்ளம் காரணமாக வேலை வாய்ப்பில் தேக்க நிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டைக் காட் டிலும் அதிக எண்ணிக்கையிலா னவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது விஸ்டம்ஜாப்ஸ். காம் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னையைப் பொருத்த மட்டில் தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், உற்பத்தித் துறைகளில் அதிக வேலை வாய்ப்பு உருவாகும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் காரணமாக உற்பத்தி மற்றும் பொறியியல் சார்ந்த துறைகளில் அதிக முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன. இதனால் இத்துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். ராணுவ கருவிகள் தயாரிப்பில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் உற்பத்தித்துறையில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். கடந்த ஆண்டு 1 சதவீத அளவுக்கு வேலை வாய்ப்பை அளித்த இத்துறை இந்த ஆண்டில் 8 சதவீத அளவுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் கடந்த ஆண்டு 1.5 சதவீத அளவுக்குத்தான் வேலை வாய்ப்புகள் உருவாயின. இந்த ஆண்டு இது 13.5 சதவீத அளவுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மருந்து தயாரிப்பு மற்றும் உடல் நலன் சார்ந்த துறையில் அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பு பெருகும். இத்துறையில் 12.5 சதவீத அளவுக்கு வேலை வாய்ப்பு இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இ-காமர்ஸ் துறையில் 15 சதவீத அளவுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம் இருக்கும் என தெரிகிறது.

அதிகம் விற்பனையாகும் நுகர் வோர் பொருள் தயாரிப்பு (எப்எம் சிஜி) நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக தேக்க நிலையை சந்தித்து வருகிறது. இதனால் இத்துறை வேலை உருவாக்கம் 0.5 சதவீத அளவுக்கே இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

சில்லரை வர்த்தகத் துறை இ-காமர்ஸ் வளர்ச்சியால் கடு மையான பாதிப்புக்கு உள்ளா கியுள்ளது. இருப்பினும் இத்து றையில் வேலை உருவாக்கம் ஸ்திரமான வளர்ச்சியை எட்டி யுள்ளது. அடுத்து வரும் ஆறு மாதங்களில் 13 சதவீத அளவுக்கு வேலை உருவாக்கம் இருக்கும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 1.5 சசவீதம் அதிகமாகும்.

தொலைத் தொடர்புத் துறையில் நவீன நுட்பங்கள் வந்து கொண்டேயிருந்தாலும் இத்துறை யில் வேலை உருவாக்கம் கடந்த ஆண்டைக் காட்டிலும் அடுத்த 6 மாதங்களில் வேலை உருவாக் கம் 0.5 சதவீதம் குறைந்து 9 சதவீத அளவிலேயே இருக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக் கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்