இந்தியா 8 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சியை அடையும்: அரவிந்த் பனகாரியா நம்பிக்கை

By செய்திப்பிரிவு

சீர்திருத்தம், பருவமழை நன்றாக இருப்பது, மத்திய அரசு உரிய நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது ஆகிய காரணங்களால் இந்த நிதியாண்டில் இந்தியா 8 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சியை எட்டும் என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: இந்த நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 8 சதவீதத்திற்கு மேல் உய ரும் என்று நம்புகிறேன். ஏனெனில் சீர்த்திருத்தங்களின் பயன்களால் இது நடக்கும். அதுமட்டுமல்லாமல் பருவமழை நன்றாக இருக்கிறது. இன்னும் சீர்த்திருத்தங்களின் பயன்கள் எவ்வாறு உள்ளது என்பதை நாம் பார்க்கவில்லை.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 காலாண்டுகளில் இல்லாத அளவு குறைந்து ஏப்ரல்-ஜூன் காலாண் டில் 7.1 சதவீதமாக உள்ளது. சுரங்கத்தொழில், விவசாயம் போன்ற துறைகளின் செயல்பா டுகள் குறைந்ததன் காரணமாக வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. என்னுடைய முந்தைய கணிப்பை விட இதுகுறைவுதான்.

இந்த வருடத்தில் பருவமழை நன்றாக இருப்பதால் முதல் காலாண்டு முடிவுகள் குறைவாக இருப்பது எந்தவொரு தாக் கத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு பனகாரியா தெரிவித்தார்.

கடந்த ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் ஜிடிபி 7.9 சதவீதமாக இருந்தது. கடந்த வருடம் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஜிடிபி 7.5 சதவீதமாக வளர்ச்சியடைந்திருந்தது.

2016-17 ஆண்டு இந்தியாவின் உணவுப் பொருட்கள் உற்பத்தி 9 சதவீதம் உயர்ந்து இதுவரை இல்லாத அளவிற்கு காரிப் பருவத் தில் 13.50 கோடி டன் ஆக உள்ளது. கடந்த வருடம் இந்த பரு வத்தில் 12.40 கோடி டன் மட்டுமே உணவுப் பொருட்கள் உற்பத்தி இருந்தது.

தற்போது பருப்பு வகை களின் உற்பத்தி அதிகமாக இருப்ப தால் கடைகளின் பருப்பு விலை குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. காரிப் மற்றும் ராபி ஆகிய இரண்டு பருவங்களிலும் நாட்டின் மொத்த உணவுப் பொருட்கள் உற்பத்தி 25.2 கோடி டன் ஆக உள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 hours ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

10 mins ago

சுற்றுலா

32 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

45 mins ago

உலகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்