நேரடி மானிய உதவி திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு

By பிடிஐ

பயனாளிகளின் வங்கிக் கணக் கில் பணத்தை மாற்றம் செய்யும் டிபிடி திட்டத்தை மேலும் 147 திட் டங்களுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தக வலை மத்திய நிதித்துறைச் செய லர் அசோக் லவாசா தெரிவித்தார்.

17 அரசுத் துறைகள் மூலம் தற்போது 74 திட்டங்களுக்கான மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இது மிகச் சிறப்பாக செயல்படுவதைத் தொடர்ந்து இதை 147 திட்டங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

செலவு நிர்வாகக் குழு பரிந்துரைகளில் 30 சதவீத அளவுக்கு தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

2017-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் டிபிடி திட்டம் 147 திட்டங்களுக்கு விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று லவாசா சுட்டிக் காட்டினார். உணவு மானியம், உர மானியம், யூரியா அல்லாத உரங்களுக்கான மானியம் உள்ளிட்டவை பயனாளிகளுக்கு நேரடியாக அளிக்கப்படுகிறது. இதனால் போலி பயனாளிகள் ஒழிக்கப்பட்டு உரியவர்களுக்கு மட்டும் பணம் சென்று சேர்கிறது. இதனால் அரசுக்கு மானியச் செலவு கணிசமாகக் குறைந்துள்ளது என்றார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

41 secs ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

42 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்