எல்ஐசியின் அடுத்த தலைவர் யார்?

By பிடிஐ

முன்னணி காப்பீட்டு நிறுவன மான ஆயுள் காப்பீட்டு நிறுவனத் தின் (எல்ஐசி) தலைவர் பதவிக்கு இன்னும் யாரும் நியமிக்கப்பட வில்லை. முன்னாள் தலைவரான எஸ்கே.ராய்க்கு இரண்டு ஆண்டு பதவிக்காலம் இருக்கையில் கடந்த ஜுன் மாதம் திடீரென ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார். அவருக்குப் பிறகு யார் தலைவர் என்பது இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. ஆனால் இரண்டு நிர்வாக இயக்கு நர் பதவிக்கு 8 செயல் இயக்கு நர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எல்ஐசி நிறுவனத்தின் உயர் பொறுப்பில் ஒரு தலைவர் மற்றும் மூன்று நிர்வாக இயக்குநர்கள் இருப்பார்கள். தற்போது வி.கே. சர்மா மற்றும் உஷா சாங்வான் ஆகிய இரண்டு நிர்வாக இயக்குநர்கள் மட்டுமே உள்ளனர். மற்றொரு நிர்வாக இயக்குநர் எஸ்.பி. மாய்னக் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓய்வு பெற்றார். அவரையடுத்து அந்த பதவிக்கு யாரும் நியமிக்கப்பட வில்லை.

மூன்றாவது நிர்வாக இயக்குநர் பதவி காலியாக இருப்பதால் மீதமுள்ள இரண்டு நிர்வாக இயக்குநர்களில் ஒருவர்தான் தலைவர் பதவிக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்மா அல்லது சாங்வான் ஆகிய இரண்டு பேரில் ஒருவரை மத்திய அரசு தேர்ந்தெடுக்கும் என்று கூறப்படுகிறது.

இரண்டு நிர்வாக இயக்கு நர்களுக்கான நேர்முகத் தேர்வு விரைவில் நடக்க இருப்பதாகவும் நிதி அமைச்சகத்திடமிருந்து முறையான அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

கல்வி

21 mins ago

ஆன்மிகம்

38 mins ago

ஆன்மிகம்

46 mins ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்