6 மாதங்களில் ஐபிஓ மூலம் ரூ.7,775 கோடி திரட்டல்

By பிடிஐ

நடப்பாண்டில் 11 நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் மொத்தம் ரூ.7,775 கோடியை திரட்டி உள்ளன. கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு இது அதிகமாகும்.

தவிர எல் அண்ட் டி இன்போ டெக், ஹிந்துஜா லேலாண்ட் பைனான்ஸ், சிஎல் எஜுகேட் மற்றும் வருண் பெவரேஜஸ் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட தயராக உள்ளன. கடந்த ஆறு மாதத்தில் பால், ஹெல்த்கேர், நிதிச்சேவைகள், எனர்ஜி உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் ஐபிஓ வெளி யிட்டன. ஐபிஓ சந்தை சாதகமாக இருப்பதால் நிறுவனங்கள் நிதி திரட்டவும், பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் வெளியேறுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 11 நிறுவனங்கள் ரூ.7,775 கோடி திரட்டியுள்ளன. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் முதல் ஆறு மாதத்தில் 29 நிறுவனங்கள் ரூ.9,693 கோடி திரட்டியதே அதிகபட்சமாக இருந்தது. 2015-ம் ஆண்டின் முதல் பாதியில் எட்டு நிறுவனங்கள் ரூ.3,850 கோடி நிதி திரட்டின.

முதல் ஆறு மாதங்களில் எக்விடாஸ் ஹோல்டிங்ஸ் ஐபிஓ மிகப்பெரியது ஆகும். இந்த நிறுவனம் ரூ.2,177 கோடி திரட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து மகாநகர் கேஸ் ஐபிஓ ரூ.1,040 கோடியும் உஜ்ஜிவன் பைனான்ஸியல் சர்வீசஸ் ரூ.882 கோடியும், பாரக் மில்க் பூட்ஸ் ரூ.742 கோடியும் திரட்டியுள்ளன.

தவிர தைரோகேர், இன்பிபீம், குயிக்ஹீல் டெக்னாலஜீஸ், டீம்லீஸ் ஆகிய நிறுவனங்களும் ஐபிஓ வெளியிட்டன.

ரூ.3,700 கோடி அந்நிய முதலீடு

கடந்த ஜூன் மாதம் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் ரூ.3,700 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். இதன் மூலம் நடப்பு ஆண்டில் ரூ.20,600 கோடி அளவுக்கான நிகர அந்நிய முதலீடு இந்திய பங்கு சந்தைக்கு வந்துள்ளது.

போதுமான அளவு பருவ மழை, நிறுவனங்களின் வருமானம் ஆகியவையால் அந்நிய முதலீடு மேலும் உயரும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் ரூ.3,713 கோடி இந்திய பங்குச்சந்தைக்கு முதலீடாக வந்திருந்தாலும், கடன் சந்தையில் இருந்து ரூ. 6,220 கோடி அந்நிய முதலீடு வெளியேறி யுள்ளது. இந்த ஆண்டில் ரூ.12,105 கோடி அளவுக்கு நிகர அந்நிய முதலீடு கடன் சந்தையில் இருந்து வெளியேறி உள்ளது.

தங்கம் இறக்குமதி 51% சரிவு

நடப்பு நிதி ஆண்டின் முதல் இரு மாதங்களில் (ஏப்ரல் மற்றும் மே) தங்கம் இறக்குமதி 51 சதவீதம் சரிந்து 270 கோடி டால ராக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் தங்கம் இறக்கு மதி 555 கோடி டாலராக இருந்தது.

இறக்குமதி குறைந்ததால் கடந்த மாதம் வர்த்தகப்பற்றாக்குறை குறைந்தது. கடந்த மாதம் வர்த்தகப் பற்றாக்குறை 627 கோடி டாலராக இருந்தது. கடந்த வருடம் இதே காலத்தில் 1,040 கோடி டாலராக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்