தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்: மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தொழில் நிறுவனங்களில் தொழி லாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் எச்.எல்.தத்து தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் ‘தொழில்துறை யும், மனித உரிமையும்’ என்ற தலைப்பில் தென்னிந்திய அளவிலான கருத்தரங்கம் சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் எச்.எல்.தத்து பங்கேற்று, கருத்தரங்கைத் தொடங்கிவைத்து பேசியதாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் சார்பில், தொழில் நிறுவனங்களில் மனித உரிமை மீறல்களை தடுக்கும் வித மாக வழிகாட்டு கொள்கைகளை உருவாக்கி, கடந்த 2011-ம் ஆண்டு வெளியிட்டிருந்தது. அதில் ‘சம்மந்தப்பட்ட அரசுகள், தொழில் நிறுவனங்களில் மனித உரிமை மீறல்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த தொழில் நிறுவனங்கள் சார்பில் மனித உரிமை மீறல்களை தடுக்கும் அம்சங்களை வகுக்க வேண்டும். இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு காண்பதற்கான வழிவகை களை சம்பந்தப்பட்ட தொழில்நிறு வனங்களே உருவாக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டு கொள்கை களை அடிப்படையாகக்கொண்டு, தேசிய மனித உரிமை ஆணைய மானது தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையில் மனித உரிமை மீறல்கள் உள்ளதா என சுய மதிப்பீட்டு செய்துகொள்வதற் கான ஒரு படிவத்தை உருவாக்கி யுள்ளது. அது தொடர்பாக நாடு முழுவதும் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை அரசுத் துறைகளில் மனித உரிமை மீறல்கள் மீது நட வடிக்கை எடுத்து வந்த ஆணை யம், தொழில் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக் கும். ஏற்கெனவே, அரசுடன் இணைந்து கொத்தடிமைகளை யும், குழந்தைத் தொழிலாளர்களை யும் ஒழிக்கும் நடவடிக்கையை இந்த ஆணையம் கடுமையாக எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தொழில் நிறுவனங்களுக்கு பொரு ளாதார வளர்ச்சி அவசியம்தான். அதே வேளையில், தொழிலாளர் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் சிஐஐ முன்னாள் தலைவர் எஸ்.கோபாலகிருஷ் ணன், செபி நிறுவனத்தின் துணை பொது மேலாளர் பிரதீப் ராமகிருஷ் ணன், மனித உரிமை ஆணைய உறுப்பினர் எஸ்.என்.மொஹந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்