குன்டேர் புட்ஸ்செக் - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

$ டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அடுத்த மாதத்திலிருந்து பொறுப்புக்கு வர உள்ளார்.

$ 2012 முதல் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஏர்பஸ் குழுமத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாக (சிஓஓ) இருந்தவர். மேலும் இந்நிறுவன குழும நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

$ நெதர்லாந்து கார் பி.வி நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

$ சர்வதேச ஆட்டோமோட்டிவ் மேலாண்மை துறையில் 25 வருட பணி அனுபவம் கொண்டவர்.

$ டெய்ம்லெர் ஏஜி நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ், தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.

$ 1984-ம் ஆண்டு மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தில் தனது பணியை தொடங்கியவர்.

$ 2005 முதல் 2011 வரை பெய்ஜிங்க் பென்ஸ் ஆட்டோமோட்டிவ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

$ ஜெர்மனியில் உள்ள கூட்டுறவு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தொழில் நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்