60% பங்குகள் ஐபிஓ விலையை விட உயர்ந்து வர்த்தகம்

By செய்திப்பிரிவு

இந்த வருடம் பொதுப்பங்கு வெளி யிட்ட (ஐபிஓ) 60 சதவீத பங்குகள் ஐபிஓ விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன. இந்த வருடம் இதுவரை 11 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டன. இதில் ஏழு பங்குகள் நிர்ணயம் செய்த விலையை விட உயர்ந்து வர்த்தக மாகின்றன. நான்கு நிறுவன பங்குகள் வெளியீட்டு விலையை விட குறைந்து வர்த்தகமாகின்றன.

மைக்ரோபைனான்ஸ் நிறுவன மான உஜ்ஜிவன் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் மே மாதம் பங்குச்சந்தையில் வர்த்தகத்தை தொடங்கியது. வெளியீட்டு விலையை விட 2 மடங்கு உயர்ந்து வர்த்தகமாகிறது. இந்த ஐபிஓ வுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து 41 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

எக்விடாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இன்பிபீம் ஆகிய நிறுவ னங்கள் ஏப்ரலில் வர்த்தகத்தை தொடங்கின. இந்த பங்குகள் முறையே 71 சதவீதம் மற்றும் 62 சதவீத லாபத்தை முதலீட்டாளர் களுக்கு கொடுத்துள்ளன.

பாரக் மில்க் பூட்ஸ் பங்கு 40 சத வீதமும், டீம்லீஸ் பங்கு 29 சதவீத மும், தைரோகேர் டெக்னாலஜீஸ் பங்கு 27 சதவீதமும், மகாநகர் பங்கு 23 சதவீத லாபத்தையும் முதலீட்டாளர்களுக்கு கொடுத் துள்ளன.

மாறாக குயிக்ஹீல் டெக்னால ஜீஸ், ஹெல்த்கேர் குளோபல் என் டர்பிரைசஸ், பாரத் வயர் ரோப்ஸ், மற்றும் பிரிசிசன் கம் ஷாப்ட்ஸ் (Precision Camshafts) ஆகிய பங்குகள் வெளியீட்டு விலையை விட சரிந்து வர்த்தகமாகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

5 mins ago

விளையாட்டு

59 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்