தொழிலாளர் பார்வையில் பிரச்சினையை அணுக வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

By செய்திப்பிரிவு

தொழிலாளர்கள் பிரச்சினையை தொழி லாளார்கள் பார்வையில் இருந்துதான் பார்க்க வேண்டுமே தவிர நிறுவனத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நாம் நம்முடைய பார்வையை மாற்றிக்கொண்டு, அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். பண்டிட் தீனதயாள் உபாத்யாய ஜெயந்தி திட்டத்தின் தொடக்க விழாவில் இதனை அவர் தெரிவித்தார். மேலும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆறு புதிய திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

வியாபாரத்தை எளிமையாக்க சிராம் சுவித இணையதளத்தை அர்பணித்தார். இந்த திட்டத்தின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யவும், 16 விதமான தொழிலாளர் சட்டங்களுக்கு ஒரே விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் போதும். இப்போதைக்கு ஒவ்வொரு சட்டத்துக்கும் தனித்தனி விண்ணப்ப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், தொழிலாளர் களுக்கான நிரந்தர பி.எப். கணக்கு திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத் தின் மூலம் பணியாளர்கள் எந்த நிறுவனங் களுக்கு மாறினாலும் ஒரே பி.எப். கணக்கை வைத்துக்கொள்ள முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் 4 கோடி பணியாளர்கள் பயனடைவார்கள்.

ஊழியர்கள் அடிக்கடி வேலை மாறுவதால், 27,000 கோடி ரூபாய் பணம் யாருடையது என்று அடையாளம் காண முடியாமல் இருக்கிறது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதால் ஒரே கணக்கிணை பணியாளர்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

மேலும் புதிய ஆய்வு திட்டத்தையும் மோடி அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் அதிகாரிகளின் தேவையற்ற அலைக்கழிப்பு (இன்ஸ்பெக்டர்ராஜ்) ஒழியும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் நிறுவனங்கள் பிரச்சினைக்கு உள்ளாவது தடுக்கப்படும் என்றார்.

மேலும் இதுபோன்ற சீர்திருத்தங்கள் மூலம் தொழில் புரிவதற்கான சூழ்நிலையை எளிதாக்கி, உற்பத்தி துறையில் அதிக கவனம் செலுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு விரும்புகிறது என்றும் மோடி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

உலகம்

27 mins ago

வணிகம்

44 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்