பழைய ரூபாய் வைத்திருந்தால் அபராதம்: மக்களவையில் மசோதா தாக்கல்

By செய்திப்பிரிவு

பணமதிப்பு நீக்கம் செய்யப் பட்ட பழைய ரூபாய் நோட்டு களை வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் மசோதா மக்கள வையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500 மற்றும் 1000 நோட்டுகளை 10 எண் ணிக்கைக்கு மேல் வைத்திருந் தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. கறுப்பு பண நடவடிக் கைகளை எல்லா வகையிலும் ஒழிக்க வேண்டும் என்பதற் காக இந்த மசோதா அறிமுகப் படுத்தப்படுகிறது என்று மக்கள வையில் இந்த மசோதாவை தாக் கல் செய்கையில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டார்.

5 மடங்கு அபராதம்

இந்த மசோதா நாடாளு மன்றத்தில் சட்டமாகும்பட்சத்தில் தனிநபர்கள் பழைய ரூபாய் நோட்டுகளில் 10 எண்ணிக்கை யிலும், நிறுவனங்கள் 25 எண் ணிக்கையில் ஆய்வுக்காக மட்டுமே வைத்திருக்க முடியும். முறை கேடாக வைத்திருந்தால் அது குற்ற மாகக் கருதப்பட்டு ரூ.10,000 அபராதம் அல்லது வைத்திருக்கும் தொகைக்கு ஈடாக 5 மடங்கு தொகையில், அதிகபட்சம் அபராதமாக வசூலிக்கப்படும்.

இந்த சட்டம் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது, அதைக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடுவது, பரிவர்த்தனை செய் வது உள்ளிட்டவற்றை 2016 டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு தடை செய்கிறது. நீதிபதி முன்னி லையில் ஆஜர்படுத்தவும், அபராதம் விதிக்கவும் வகை செய்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்