நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை

By பிடிஐ

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். புதிய மேம்பாட்டு வங்கியின் (என்டிபி) இரண்டாவது ஆண்டு கூட்டத்தில் பேசிய ஜேட்லி இவ்வாறு கூறினார். இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறியதாவது:

கடந்த நிதி ஆண்டில் இந்தியா வின் வளர்ச்சி 7.2 சதவீதமாகும், நடப்பு நிதி ஆண்டில் 7.7 சதவீத மாகவும் இருக்கும். வளர்ச்சி நன்றாக இருந்தாலும் வளரும் நாடுகளுக்கு சவால்களும் இருக்கின்றன. வளர்ந்த நாடு களின் பாதுகாப்பு உணர்வு, சர்வதேச நிதி நிலைமை உள்ளிட் டவை சவால்கள் ஆகும். இந்த சவால்களில் வாய்ப்புகளும் அடங்கி இருக்கிறது.

புதிய மேம்பாட்டு வங்கி யிடம் இருந்து பல்வேறு திட்டங் களுக்காக 200 கோடி டாலர் இந்தியா கோரியிருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் கட்டுமானத் திட்டங்களுக்காக 64,600 கோடி டாலர் இந்தியாவுக்கு தேவைப்படும். புதிய மேம்பாட்டு வங்கியுடன் இணைந்து, ஸ்மார்ட் நகரங்கள், எரிசக்தி, நகர்ப்புற போக்குவரத்து உள்ளிட்ட பல திட்டங்களில் இந்தியா இணைந்து செயல்பட இருக்கிறது என மத்திய அமைச்சர் தெரிவித் தார்.

புதிய மேம்பாட்டு வங்கியை வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா (பிரிக்ஸ்) ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியது. இந்த வங்கியின் தலைவராக கே.வி. காமத் செயல்பட்டு வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்