கடந்த 8 வருடங்களில் இந்தியாவில் சம்பள உயர்வு 0.2 சதவீதம்: ஹே குரூப் ஆய்வில் தகவல்

By பிடிஐ

எட்டு வருடங்களுக்கு முன்பாக சர்வதேச பெரு மந்த நிலை ஏற்பட்டது. அதன் பிறகு இந்தியாவில் சம்பள உயர்வு 0.2 சதவீதம் (பணவீக்கத் துக்குப் பிறகு) என்ற நிலையிலே இருப்பதாக ஹே குரூப் நிறுவனத் தின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

ஆனால் இதே காலத்தில் சீனா, இந்தோனேசியா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் சம்பள வளர்ச்சி விகிதம் முறையே 10.6 சதவீதம், 9.3 சதவீதம் மற்றும் 8.9 சதவீதமாக இருக்கிறது. மாறாக சில நாடுகளில் எதிர்மறை வளர்ச்சியும் இருக்கிறது. துருக்கி(-34.4%), அர்ஜெண்டீனா (-18.6%), ரஷ்யா (-17.1%) மற்றும் பிரேசில் (-15.3%) ஆகிய நாடுகளில் எதிர்மறை வளர்ச்சியும் இருக்கிறது.

ஜி 20 நாடுகளில் சம்பள வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது, சில நாடுகளில் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மத்திய நிலையில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் ஊதிய வளர்ச்சியில் சமமற்ற நிலை இருக்கிறது. சில ருக்கு அதிக ஊதியமும், சிலருக்கு குறைவான ஊதியமும் கடந்த எட்டு வருடங்களில் கிடைத்திருக்கிறது.

உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு நல்ல ஊதிய உயர்வு கிடைத்திருக்கிறது. இதற்கு தகுதி வாய்ந்த பணியாளர்கள் இல்லாததும் ஒரு காரணமாகும். தவிர சர்வதேச அளவில் ஒப்பிடும் போது இந்திய மேலாளர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டு வருவதால், ஊதிய உயர்வின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. அதே சமயத்தில் கீழ்நிலையில் வேலை கிடைக்காமல் பலர் இருப்பதால் ஊதிய உயர்வு குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் வளர்ந்த நாடு களில் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. 2008-ம் ஆண்டு டிசம்பருக்கு பிறகு ஊதிய வளர்ச்சி விகிதம் 3.1 சதவீதம் சரிந்திருக்கிறது. (பணவீக்கத்துக்கு பிறகு) வளர்ந்த நாடுகளில் கனடா வின் சம்பள உயர்வு சிறப்பாக இருக்கிறது. 7.2 சதவீத அளவில் வளர்ச்சி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்