டிசம்பர் மாதத்தில் தங்க இறக்குமதி 48.49 சதவீதம் குறைவு

By செய்திப்பிரிவு

கடந்த டிசம்பர் மாதத்தில் தங்க இறக்குமதி 48.49 சதவீதம் குறைந்து 196 கோடி டாலருக்கு இறக்குமதி நடந்துள்ளது. ஒட்டுமொத்த அமைப்பில் பணத் தட்டுப்பாடு காரணமாக தங்க இறக்குமதி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 380 கோடி டாலருக்கு தங்க இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் வரை தங்க இறக்குமதி குறைந்து கொண்டே வந்தது. அதன் பிறகு அக்டோபர் நவம்பர் மாதங்களில் இறக்குமதி அதிகரித்தது. ஆனால் டிசம்பர் மாதம் பணத்தட்டுப்பாடு இருந்த காரணத்தினால் தங்க இறக்குமதி குறைந்துள்ளது.

கடந்த மாதத்தில் தங்க இறக்குமதி குறைந்துள்ளதால் 1,036 கோடி டாலருக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.2015-ம் ஆண்டு டிசம்பரில் வர்த்தக பற்றாக்குறை 1,150 கோடி டாலர் ஆக இருந்தது. தங்க இறக்குமதி குறைவது நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைவதற்கு உதவியாக இருக்கும்.

அதேபோல கடந்த டிசம்பர் மாதத்தில் வெள்ளி இறக்குமதியும் 81.55 சதவீதம் சரிந்து 8.7 கோடி டாலருக்கு இறக்குமதி நடந்துள்ளது. 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 47.2 கோடி டாலருக்கு இறக்குமதி நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் தங்க இறக்குமதி 60 டன்னாக குறைந்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிகமாக தங்க நுகர்வோர்கள் உள்ள இரண்டாவது நாடு இந்தியா. 2015-16 நிதியாண்டில் 650 டன் தங்க இறக்குமதி நடந்தது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்