டிசிஎஸ் லாபம் ரூ.5,244 கோடி

By செய்திப்பிரிவு

நாட்டின் மிகப்பெரிய மென் பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 13.2 சதவீதம் உயர்ந்து 5,244 கோடி ரூபாயாக இருக்கிறது. வருமானம் 13.5 சதவீதம் உயர்ந்து 23,816 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் நிகர லாபம் 4563 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனத்தின் நிகர லாபம் வரம்பு 0.07 சதவீதம் சரிந்திருக்கிறது.

சிஎம்சி நிறுவனத்தை வாங்கியது

நேற்று சிஎம்சி நிறுவனத்தை டிசிஎஸ் நிறுவனம் வாங்கியது. இந்த இணைப்புக்கு டிசிஎஸ் மற்றும் சிஎம்சி நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியது. 100 சிஎம்சி பங்குகளுக்கு 79 டிசிஎஸ் பங்குகள் வழங்கப்படும். சிஎம்சி நிறுவனத்தின் செப் டம்பர் காலாண்டு வருமானம் 616.69 கோடியாகும்.

சிஎம்சி நிறுவனம் 1975-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் 11,000க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் பணிபுரிகிறார்கள். வர்த்தகத்தின் முடிவில் டிசிஎஸ் நிறுவனப் பங்கு 0.78 சதவீதம் சரிந்தும், சிஎம்சி பங்கு1.18 சதவீதம் உயர்ந்தும் முடிவடைந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

ஓடிடி களம்

46 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்