இவரைத் தெரியுமா?- கோபிசந்த் ஹிந்துஜா

By செய்திப்பிரிவு

ஹிந்துஜா குழும நிறுவனங்களின் இணை தலைவர், ஹிந்துஜா ஆட்டோமோடிவ் இங்கிலாந்து நிறு வனத்தின் தலைவராகவும் உள்ளார்.

குடும்ப நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தில் 1959ல் இணைந்தவர். மத்திய கிழக்கு நாடுகளின் செயல்பாடுகளை பல பில்லியன் டாலர் கூட்டு தொழில்களாக விரிவுபடுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்.

பொதுவான உணர்வு நிலைகளுக்கு (common sense) முக்கியத்துவம் கொடுப்பவர். 1984ல் நிறுவனம் கல்ப் ஆயில், 1987ல் அசோக் லேலாண்ட் போன்ற நிறுவனங்களை கையகப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியவர்.

மும்பை ஜெய் ஹிந்த் கல்லூரியில் பட்டம் பெற்றவர், லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பும், ரிச்மவுண்ட் கல்லூரியில் பொருளாதாரத்தில் பிஹெச்டி பட்டமும் பெற்றவர்.

மலைபேற்றம், நீச்சல் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர். தற்போது இவரது சகோதரருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

சண்டே டைம்ஸ் வெளியிட்ட பிரிட்டன் வாழ் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இவர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

இலக்கியம்

5 hours ago

தமிழகம்

32 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்