ஹூண்டாய் விற்பனை 7% உயர்வு

By செய்திப்பிரிவு

ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் ஜூன் மாத கார் விற்பனை 7 சதவீதம் உயர்ந்து 55,713 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 52,062 வாகனங்கள் விற்பனையானது. உள்நாட்டு சந்தையில் 39,806 வாகனங்கள் விற்பனையானது. கடந்த வருடத்தை விட உள்நாட்டு விற்பனை 9.7 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

ஏற்றுமதி விற்பனை சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 15,762 வாகனங்கள் ஏற்றுமதியானது. இந்த வருடம் 15,907 வாகனங்கள் ஏற்றுமதியானது. கிராண்ட் ஐ10, எலைட் ஐ20 மற்றும் கிரெடா ஆகிய மாடல்கள் நன்றாக விற்பனையானதாக விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு துணைத்தலைவர் ராகேஷ் வத்ஸவா கூறினார். தவிர பருவமழை மற்றும் ஏழாவது சம்பள கமிஷன் காரணமாக ஆட்டோமொபைல் துறையில் சாதகமான சூழல் இருப்பதாகவும் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்