இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.5% வரை எட்டும்: ஐஎம்எப்-க்கு ப.சிதம்பரம் பதில்

By செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டில் (2013-14) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதம் முதல் 5.5 சதவிகிதம் வரை வளர்ச்சியடையும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) ஆகியவற்றின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வாஷிங்டன் வந்துள்ள அவர், கார்னெகியில் உள்ள அரசியல் ஆலோசகர்கள் நிறைந்தகூட்டத்தில் பேசுகையில் இக்கருத்தைத் தெரிவித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) வெளியிட்ட கருத்தில் எனது கருத்து கேட்கப்படவில்லை என்பது எனக்குத் தெரியும். அவர்களது அவநம்பிக்கைக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள், ஸ்திரமான நிலையில் தனியார் நிறுவனங்கள் ஆகியவை மூலமான பங்களிப்பு நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமானதாகும். இப்போது சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது 5 சதவீத வளர்ச்சி என்பது சாத்தியமானதே.

ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவின் நிதிநிலை வலுவடைந்து வருகிறது. இதனால் நாட்டில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உயர வழிவகுக்கும்.

இப்போதும் இந்திய பொருளாதார கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக இந்த கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். இத்தகைய வலுவான கட்டமைப்பால் இந்தியாவின் பொருளாதாரம் நிச்சயம் வளர்ச்சியடையும்.

உலகில் மந்த பொருளாதார நிலை நிலவிய 2008-09-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது. அதற்கடுத்த ஆண்டு 8.6 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டது. 2010-11-ம் நிதிஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.3 சதவீத அளவுக்கு உயர்ந்தது.

2011-ம் நிதி ஆண்டில் சர்வதேச அளவில் பொருளாதார தேக்க நிலை பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதே ஆண்டு இந்தியாவிலும் முதலீடுகள் குறைந்து நுகர்வும் அதிகரித்ததில் வளர்ச்சி விகிதம் 2011-12-ம் நிதியாண்டில் 5 சதவீத அளவுக்குக் குறைந்தது. 2012-13ம் நிதி ஆண்டில் வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் கீழாகக் குறைந்தது.

அதிகரித்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை காரணமாக நடப்புக் கணக்கு பற்றாக்குறை (சிஏடி) 2012-13-ம் நிதிஆண்டில் 8,800 கோடி டாலராக உயர்ந்தது. இது ஜிடிபி-யில் 4.8 சதவிகிதமாகும். உற்பத்தித்துறையில் ஏற்பட்ட கடும் சரிவு, சேவைத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகியன காரணமாக நடப்பு நிதிஆண்டில் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவிகிதமாக இருந்தது.

இந்தகால கட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தனித்துவமானது. பொதுவாக அனைத்து வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதிச் சிக்கலுக்கு விரைவில் தீர்வு காணப்படுவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இதில் ஏற்படும் தாமதம் சர்வதேச அளவிலான பொருளாதார மீட்சியில் எதிரொலிக்கும்.

இந்தியப் பொருளாதாரத்தில் ஆரம்பத்தில் காணப்பட்ட மீட்சி, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஏற்றுமதி அதிகரித்ததையும் சுட்டிக் காட்டிய சிதம்பரம், வரும் காலங்களில் கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன என்பதையே சர்வதேச பொருளாதார சூழல்கள் காட்டுகின்றன” என்றார் ப.சிதம்பரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்