காலாண்டு முடிவுகள்: பேங்க் ஆஃப் இந்தியா, டைட்டன், அலஹாபாத் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, டி.எல்.எஃப்.

By செய்திப்பிரிவு

பேங்க் ஆஃப் இந்தியா லாபம் 2 மடங்கு உயர்வு

பேங்க் ஆஃப் இந்தியாவின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ 621 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருட இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.301.85 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது. அதேபோல வங்கியின் மொத்த வருமானமும் உயர்ந்திருக்கிறது. கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் மொத்த வருமானம் ரூ 8,899.55 கோடியாக இருந்தது. ஆனால் இப்போது ரூ 10,339.55 கோடியாக உயர்ந்திருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாத கால நிகரலாபம் 33 சதவிகிதம் உயர்ந்து ரூ 1,585.95 கோடியாக இருக்கிறது. ஆனால் வங்கியின் நிகர வாராக்கடன் 1.85 சதவிகிதத்திலிருந்து 2.04 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.

இந்த பங்கு 21 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது.

டைட்டன் லாபம் 3.59% உயர்வு

டைட்டன் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு லாபம் 3.59 சதவிகிதம் உயர்ந்து ரூ186.65 கோடியாக இருக்கிறது. கடந்த வருட இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் ரூ180.17 கோடி. நிறுவனத்தின் வருமானமும் 1.40 சதவிகித அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் ரூ. 2,258 கோடியாக இருந்த வருமானம் இப்போது ரூ 2,290 கோடியாக இருக்கிறது.

பருவமழை காரணமாக நுகர்வோரின் தேவைகள் அதிகரிக்கும் என்றும், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டு நல்ல வளர்ச்சி இருக்கும் என்று நம்புவதாக டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாஸ்கர் பட் தெரிவித்தார்.

வர்த்தகத்தின் முடிவில் இந்த பங்கு 4 சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்து 267.20 ரூபாயில் முடிவடைந்தது.

அலஹாபாத் பேங்க் லாபம் 18% உயர்வு

கோல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியான அலஹாபாத் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 18 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் வங்கியின் நிகரலாபம் ரூ.234.20 கோடியாக இருந்தது. ஆனால் இப்போது 18 சதவிகிதம் உயர்ந்து ரூ. 275.81 கோடியாக உயர்ந்திருக்கிறது.

வங்கியின் மொத்த வருமானமும் கடந்த வருடத்தை விட உயர்ந்திருக்கிறது. கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் ரூ4,582 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ. 5,303 கோடியாக உயர்ந்திருக்கிறது.

கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் வங்கியின் நிகரவாராக்கடன் 2.10 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது அது 3.83 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

பேங்க் ஆஃப் பரோடா லாபம் 10% சரிவு

பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் லாபம் 10 சதவிகிதம் சரிந்து ரூ. 1,168 கோடியாக இருக்கிறது. கடந்த வருட இதே காலாண்டில் வங்கியின் லாபம் 1301 கோடியாக இருந்தது.

வாராக் கடன்களுக்கு கணிசமான தொகையை (860 கோடி ரூபாய்) ஒதுக்கியுள்ளதால் நிகர லாபம் குறைந்திருப்பதாக வங்கி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

ஆனால் வங்கியின் மொத்த வருமானம் கடந்த வருட செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது உயர்ந்திருக்கிறது.

கடந்த வருட செப்டம்பர் காலாண்டின் வருமானம் ரூ. 9,550 கோடியாக இருந்தது. ஆனால் இப்போது 10,447 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் 3.15 சதவிகிதமாகும். ஆனால் கடந்த வருடம் இதே காலாண்டில் 1.98 சதவிகிதமாக இருந்தது.

டி.எல்.எஃப். லாபம் 45% சரிவு

இந்தியாவின் அதிக கட்டுமானத் துறையில் ஈடுபட்டுவரும் டி.எல்.எஃப். நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகரலாபம் 45% சரிந்து ரூ 100 கோடியாக இருக்கிறது.

கடந்த வருடம் இதே காலாண்டில் 181 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் நிறுவனத்தின் வருமானமும் 9 சதவிகிதம் குறைந்திருக்கிறது.

கடந்த வருட செப்டம்பர் காலாண்டில் ரூ 2,453 கோடியாக இருந்த வருமானம், நடந்து முடிந்த செப்டம்பர் காலாண்டில் ரூ 2,225 கோடியாக சரிந்துவிட்டது. அதே சமயத்தில், டி.எல்.எஃப். நிறுவனத்தின் சொகுசு வீடுகளுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. ஜூன் காலாண்டு நிலவரப்படி இந்த நிறுவனத்துக்கு ரூ20,369 கோடி அளவுக்கு கடன் இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டுக்குள் இதை ரூ17,500 கோடியாக குறைக்க திட்டமிட்டிருப்பதாகவும் நிறுவனம் சொல்லி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்