ஃபேஸ்புக் நிறுவனத்தின் ‘எஃப்பி ஸ்டார்ட்’ திட்டத்துக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு

By ஐஏஎன்எஸ்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் எஃப்பி ஸ்டார்ட் எனப்படும் திட்டத்துக்கு இந்தியாவில் மிகப் பெரிய சந்தை வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் `எஃப்பி ஸ்டார்ட்’ எனப்படுவது ஓராண்டு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் செயலி உருவாக்கு வோர் அதை வடிவமைத்து அதை வளர்த்து அதன் மூலம் லாபம் அடைவதற்கு இது உதவும். இந்தத் திட்டமானது 2014-ம் ஆண்டு தொ டங்கப்பட்டதாகும்.

இந்தத் துறையில் 12 ஆண்டு க ளுக்கும் மேலாக தங்கள் குடும்ப செயலி மூலம் இணைப்பில் இருப் பதற்கு இது மிகவும் வெளிப்ப டையானதாகவும், உலகில் எங்குள் ளவருடனும் தொடர்பு கொள்ளும் வகையில் இருப்பதுதான் என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் பொருள் பிரிவின் பங்குதாரரான சத்யஜித் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உருவாக்கப்படும் செயலிகளில் 75 சதவீதம் ஃபேஸ் புக் சமூக வலைதளத்துடன் ஒருங் கிணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஒவ்வொரு மாதமும் 170 கோடி மக்கள் ஃபேஸ்புக்கை பயன்ப டுத்துகின்றனர். இவர்களில் 100 கோடி பேர் வாட்ஸ்அப்-பையும், 100 கோடிக்கும் அதிகமானோர் மெசஞ்சரையும், 50 கோடி பேர் இன்ஸ்டாகிராமையும் பயன்ப டுத்துகின்றனர். இந்த தளங்கள் வாயிலாக தங்களது அனுபவங் களை இணைப்பில் பகிர்ந்து கொள் கின்றனர்.

இருப்பினும் கோடிக் கணக்கானவர்கள் இந்த இணைப்பில் இல்லாமல் உள்ளனர். இதைக் கருத்தில் கொண்டே ஃபேஸ்புக் தளத்தில் எஃப்பி ஸ்டார்ட் எனும் திட்டம் மூலம் அவர்களது செயலிகளை உருவாக்கி மேம்படுத்தவும் தங்களது வர்த்தகம் வேகமாக வளரவும் உதவுகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

எஃப்பி ஸ்டார்ட் திட்டத்தில் மேம்பாட்டாளர்கள் செயலி உரு வாக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரு வதால் தங்களது தயாரிப்புகளை மேம்படுத்த முடிகிறது.

முதலில் கணக்குத் தொடங்கியவுடன் எஃப்பி ஸ்டார்ட் 25 இலவச சேவைகளை அளிக்கிறது. இதன் மூலம் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும். இதன் மூலம் தொழில்முனைவோர் தங்களது செயலியை செயல்படுத்தி தங்களது யோசனையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று ஸ்டார்ட்அப் உருவாக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இந்நிறுவனம் கொச்சி, சென்னை, ஹைதராபாத், மும்பை, புணே, அகமதாபாத், ஜெய்ப்பூர், சண்டீகர் உள்ளிட்ட நகரங்களில் விளம்பர பேரணிகளை நடத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுலா

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

மேலும்