மொத்த விலை பணவீக்கம் 3.55 சதவீதமாக உயர்வு: உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு

By பிடிஐ

மொத்தவிலை குறியீடு அடிப் படையிலான பணவீக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் 3.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் காய்கறிகள், பருப்பு வகைகள், சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 1.62 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் -4.00 சதவீதமாக மொத்த விலை குறியீடு புள்ளிவிவரங்கள் இருந்தது.

மொத்த விலை பணவீக்கம் 2014 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 3.74 சதவீதம் இருந்தது. அதற்கு பிறகு 2016 ஜூலையில் அதிகபட்சமான அளவை எட்டியுள்ளது. ஜூலை மாத மொத்த விலை குறியீடு பணவீக்கம் பருப்பு வகைகளில் 35.76 சதவீதமாக உயர்ந்துள்ளது. காய்கறிகளுக்கான பணவீக்கம் 28.05 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உணவுப்பொருட்களில் அதிகபட்சமாக உருளைக்கிழங்கு 58.78 சதவீதம் பணவீக்கத்தைக் கண்டுள்ளது. ஜீலை மாதத்தில் பழங்கள் பணவீக்கம் உயர்ந்து 17.30 சதவீதமாகவும் இருந்தது.

மே மாதத்தில் உணவு பணவீக்கம் அதிகரிக்க தொடங்கி 1.24 சதவீதமாக இருந்தது. ஆனால் 0.79 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.

ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 11.82 சதவீதமாக இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.

உற்பத்தி துறை குறியீடு ஜூலை மாதத்தில் 1.83 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக சர்க்கரை பணவீக்கம் 32.33 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் நடைபெற்ற நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் பணவீக்க அளவை கட்டுக்குள் வைப்பது குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு செய்தது. வட்டி விகிதங்களை தற்போதைய நிலையிலேயே தொடர்வதன் மூலம் 2017 மார்ச் மாதத்துக்குள் பணவீக்கத்தை 5 சதவீதம் என்கிற அளவுக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இலக்கு வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள்படி இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

க்ரைம்

22 mins ago

இந்தியா

35 mins ago

உலகம்

3 mins ago

க்ரைம்

26 mins ago

சுற்றுச்சூழல்

30 mins ago

தமிழகம்

39 mins ago

உலகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

கல்வி

1 hour ago

மேலும்